பக்கம்:மேனகா 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மேனகா

பணத்தைக் கொடுக்க, சாமாவையர் அதை வாங்கித் தமது மூட்டையில் சேர்த்து கட்டிக்கொண்டார்.

வரதா:- முன் கலியாணம் செய்திருந்த பெண் இனிமேல் வருவாளா?

சாமா:- அவள் ஏன் வருகிறாள்? அவள் தான் ஒரு நாடகக்காரனோடு ஒடிப்போய்விட்டாளே அந்தக் கவலை வேண்டாம்.

வரதா:- அப்படியா அதுவும் நல்ல அதிர்ஷ்டம் தான். எப்படியாவது நமது பங்கஜவல்லி வக்கீலைக் கலியாணம் செய்துகொண்டு பங்களாவுக்கு எஜமானியாக இருந்து வாழ்வதை நாம் ஒரு நிமிஷமாவது கண்ணாரப் பார்த்து சந்தோஷப்படுவது போதும் என்றார்.

இவ்வாறு அவ்விரு நண்பரும் நெடுநேரம் வரையில் பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள் வரதாச்சாரியின் மனைவியும் அங்கு வந்து, அப்போதே மலர்ந்த தாமரை மலரைப் போன்ற இனிய முகத்தோடு சாமாவையரை வரவேற்று, க்ஷேமம் விசாரித்து, பல விஷயங்களைப்பற்றி உசாவி, மகிழ்ச்சியடைந்து, அளவளாவியிருந்தாள். அவருக்குரிய விருந்து முதலியவற்றிற்கு வேண்டிய ஏற்பாடுகளை மிகுந்த பரபரப்போடும் உவப்போடும் செய்து முடித்தபின் ஒரு நிமிஷமும் அவரை விடுத்து அப்புறம் செல்லாமல் மிகவும் குழைவாக அவரோடு சம்பாஷணை செய்தவண்ண மிருந்தாள். அன்றைய மாலை வரையில் ஐயரவர்கள் வரதாச்சாரியின் இல்லத்தில், அம்மாளின் வரம்பு கடந்த அன்பினால் சகலவித சுகங்களையும் அநுபவித் திருந்தார். கணவன் மனைவி ஆகிய இருவரும் அவருக்கு இராஜஉபசாரம் செய்து, முதல்தரமான விருந்தளித்து, இன்பக் கடலிலாட்டி, அவர் மனம் குளிரும்படி நடந்துகொண்டனர். மாதுரியமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/40&oldid=1251853" இலிருந்து மீள்விக்கப்பட்டது