பக்கம்:மேனகா 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மேனகா

லிருந்தலால் பயிர்ப்பைக் காட்டும் பதிவிரதா ஸ்திரீகளைவிட அதிகமாக அவள் மேனியின் நெளிப்பையும், அமைதி யின்மையையும் காட்டி உடைகளையும் ஆபரணங்களையும் நொடிக்கு நூறுமுறை சீர்திருத்திக் கொண்டாள்.

அவள் அறிந்தோ அறியாமலோ தொடுத்த அத்தனை அம்புகளும் விலக்கவொண்ணாவகையில் பசுமரத் தாணிபோல் சாமாவையரது உள்ளத்திற் பதிந்து ஊடுருவிச் சென்றன. ஆதலின், அவரது பாடு தொல்லையாய் முடிந்தது. முதலில் அவள் தனிமையில் தம்முடன் வரப்போவதாக உணர்ந்தவுடனே அவரது மனதில் ஒருவித இன்பமும், அமரிக்கையின்மையும், லஜ்ஜையும் சுரந்தன. அவளோடு வந்த மனிதன் அவளைத் தமது பாதுகாப்பில் ஒப்புவித்த பிறகோ, அவரது மநோ வேதனை மலையாக வளர்ந்து அனர்த்தம் செய்யத் தொடங்கியது. சகிக்க வொண்ணாத ஒருவகை இன்பமும், துன்பமும் ஒருங்கே எழுந்து, அவரது மனதைப் புண்படுத்த ஆரம்பித்தன. அவள் யாவளோ வென்பதை முதலில் அறிய அவரது மனம் பதறியது; அவளது அதிகரித்த நாணத்தைக் கண்டு, அவள் குடும்ப ஸ்திரீயே யென்று நினைத்துக்கொண்டார். மாணிக்கக் கட்டியோ, கற்கண்டுக் கட்டியோவெனத் தோன்றிய அந்தக் கந்தருவ மங்கை வேறு எவனுக்காயினும் தன்னை அர்ப்பணம் செய்து விட்டவளோ வென்பதை யறிய, அவளது கழுத்தில் தாலி இருக்கிறதோ வென்று உற்று நோக்கினார். காசுமாலை, வைர அட்டிகை, கடியாரச் சங்கிலி முதலியவை அவளது அழகிய மார்பில் காணப்பட்டனவன்றி, மாங்கலியம் காணப்படவில்லை.

அவள் திருவாரூருக்குச் செல்பவளென்பதையும், அவள்து பெயர் கமலமென்பதையும் சந்தேகமற உணர்ந்தார். அந்த ஊர் அவளது பிறந்தவிடமோ அல்லது புகுந்தவிடமோ என்பதே அவரது சந்தேகமாய் வதைத்தது. கோடீசுவரனது செல்வப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/48&oldid=1251861" இலிருந்து மீள்விக்கப்பட்டது