பக்கம்:மேனகா 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

45

மீனிலும் அதிகரித்த சுறுசுறுப்பும் பிறழ்ச்சியும் கொண்ட கண்களில் கரிய மை தீட்டப்பட்டிருந்தது. செவிகளிலிருந்த வைரக் கம்மல்களும், அவற்றைக் கேசத்தோடு இணைத்த வைரமாட்டல்களும் சுடர் விட்டெரிந்தன. கரை காணாது கடல்களில் தவிக்கும் கப்பல்களை தீப ஸ்தம்பத்திலுள்ள பெருஞ்ஜோதி கைகாட்டி அழைப்பதுபோல அவளது நாசியின்மீதிருந்த ஒற்றை வைரக்கல் தனது கிரணக் கற்றைகளான கரங்களை விரித்து, அண்டுவோர்க் கெல்லாம் அபயஸ்தம் காட்டி யழைத்தது. ரோஜாப்பூவை பச்சையான இதழ்கள் மறைத்திருப்பதைப்போல அவள் தனது மேனியில் ஜரிகைப் புட்டாக்கள் அணிந்திருந்தாள். இடையிலிருந்த தங்க ஒட்டியாணம் அவளது தேக அமைப்பை ஆயிரம் மடங்கு வனப்பித்துக் காட்டியது. உச்சி முதல் உள்ளங்கால் வரையில் இயற்கையழகும் செயற்கையழகும் ஒன்று பட்டிழைந்து ஜ்வலிக்க, அவள் அப்படியே மணப்பந்தலில் உட்கார ஆயத்தமாக வந்துள்ள புதிய சோபனப் பெண்ணைப்போல யெளவனமும், புதுமையும், கட்டழகும் நிருத்தனம் செய்ய, நவரத்தினங்களை மலர்களாய் ஏந்திய பூங்கொம்பைப்போல அவளிடம் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும் பெண் குணம் பொலிந்தனவாயினும், அக்குணங்கள் காண்போர் மனதைச் சின்னாபின்னமாக்கிச் சீர்குலைத்து, அவரது நினைவை அவள்மீது திருப்பினவன்றி அமைதியுண்டாக்க வில்லை. அவள் இயற்கையில் நாணமுடையவளா யிருந்தாளேனும், அவளது கூரிய கண்கள் கபடமாக அங்கு மிங்கும் கடைக்கணித்து அண்டையில் இருந்தோரைப் பற்றி விவரங்களை விரைவில் கிரகித்தன. ஆதலின், அந்த நாணம் குடும்ப ஸ்திரீகளின் களங்கமற்ற நாணமாகத் தோன்றவில்லை. அவள் தன் வலது கையின் மணிக்கட்டில் ஒருசிறிய கடிகாரத்தைக் கட்டிக்கொண்டிருந்தது அவள் புது நாகரீக மறிந்த பெண்ணென்பதைக் காட்டியது. அன்னிய மனிதருக்கருகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/47&oldid=1251860" இலிருந்து மீள்விக்கப்பட்டது