பக்கம்:மேனகா 2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மேனகா


முற்றிலும் அந்தரங்கமான அபிமானத்தைக் காட்டிய அந்தச் சொல்லைக் கேட்ட மேனகா சிறிது ஆறுதலும் துணிவு மடைந்து, “நான் இப்போது எங்கிருக்கிறேன்? நேற்றிரவு நான் கண்ட மகம்மதியருக்கு நீ அநுகூலமாயிருப்பவளா? அல்லது, எனக்கு அநுகூலமாயிருப்பவளா? என் தேகம் இப்போது களங்க மற்ற நிலைமையிலிருக்கிறதா ? அல்லது, களங்க மடைந்து, தீயில் சுட்டெரிக்கத்தக்க நிலைமையிலிருக்கிறதா?” என்று மிகவும் நயந்து உருக்கமாகக் கேட்டாள்.

அவளது சொற்கள் மிக்க பரிதாபகரமாக விருந்தன; வாய் குழறியது. கண்களினின்று கண்ணிர் பெருகி வழிந்தது. நூர்ஜஹானது வாயிலிருந்து எவ்விதமான மறுமொழி வரப்போகிறதோ வென்று அவளது வாயையே உற்று நோக்கினாள். அந்த ஒரு நொடியும் ஒரு யுகமாய்த் தோன்றியது. இயற்கையிலேயே மேன்மையான குணமும் இளகிய மனமும் பெற்ற நூர்ஜஹான் அந்தப் பரிதாபகரமான காட்சியைக் கண்டு நைந்திளகி மேனகா வினண்டையில் நன்றாக நெருங்கி அவளை அன்போடு அணைத்து, அவளது கண்ணிரைத் தனது முந்தானையால் துடைத்து, “அம்மா! அழாதே, உனது கற்பிற்குச் சிறிதும் பங்க முண்டாகவில்லை. நீ கத்தியால் குத்திக்கொள்ளப் போனதைக் கண்டு நானே உனது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கினேன். உடனே நீ பயத்தினால் மூர்ச்சையடைந்து, உயிரற்றவள் போலக் கீழே விழுந்து விட்டாய். நானும் என்னுடைய அக்காளும் உன்னை எடுத்து வந்து விட்டோம். இப்போது நாம் அந்த வீட்டிலில்லை. இது மைலாப்பூரிலுள்ள என் தகப்பனாருடைய பங்களா. நீ இனி கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம்” என்று உறுதி கூறினாள். அந்த சந்தோஷகரமான செய்தியைக் கேட்டவுடனே மேனகாவின் தேகம் கட்டிற் கடங்காமல் பூரித்துப் புளகாங்கித மடைந்தது. நூர்ஜஹானது பேருதவியைப் பற்றி அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/6&oldid=1251468" இலிருந்து மீள்விக்கப்பட்டது