பக்கம்:மேனகா 2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

5

மனதிலெழுந்த நன்றியறிவின் பெருக்கினால், உள்ளம் பொங்கி யெழுந்தது. கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. தென்றலால் நடுங்கும் மாந்தளிர்போல, அவளது மேனி துடித்தது. “அம்மா புண்ணியவதி! என்னுடைய கற்பைக் கொள்ளை கொள்ள நினைத்த கள்வனிடமிருந்து என்னைக் காப்பாற்றியதன்றி, என் உயிரைக்கவர்ந்து சென்ற எமனிடமிருந்தும் அதை மீட்ட பேருபகாரியாகிய உனக்கு நான் எனது நன்றியறிவை எவ்விதம் காட்டப்போகிறேன்!” என்று விம்மி விம்மி உருக்கமாகக் கூறினாள்.

நூர்:- நன்றா யிருக்கிறதே! கரும்பைத் தின்பதற்கு வாய் கூலி கேட்பதைப்போல இருக்கிறதே இது! விலை மதிப்பற்ற கற்பினாலேயே பெண்மக்களுக்கு இவ்வளவு மேன்மையும் பெருமையும் மதிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகையால், ஒவ்வொரு ஸ்திரீயும் தனது உயிரைக் காட்டிலும் கற்பையே உயர்ந்ததாக மதித்து அதைக் காப்பாற்றக் கடமைப் பட்டிருக்கிறாள். நம்முள் ஒருத்தியின் கற்புக்குத் துன்பம் நேரிடுமாயின் அதை மற்றவள் தன்னுடைய துன்பமாகக் கருதி விலக்கக் கடமைப் பட்டிருக்கிறாள். அப்படிச் செய்யத் தவறுவாளானால் ஒருத்தியின் இழிவில் மற்றவளுக்கும் பங்கு கிடைக்குமென்பது நிச்சய மல்லவா! என்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொள்ள நான் எவ்வளவு தூரம் கடமைப் பட்டவளோ, அவ்வளவுதூரம் உன்னுடைய மானத்தைக் காப்பாற்றவும் நான் கடமைப்பட்டவள். நாம் உண்பதைக் குறித்து, கைக்கு வாயும், வாய்க்கு வயிறும், வயிறுக்கு எல்லா அவயவங்களும் உபசார வார்த்தை சொல்லி நன்றி செலுத்துதல் போல இருக்கிறது, இவ்விடத்தில் நாம் ஒருவருக்கொருவர் நன்று செலுத்துவது என்றாள்.

நூர்ஜஹானது கண்ணிய புத்தியையும் உயர்ந்த குணங்களையும் ஜீவகாருண்யத்தையும் கண்ட மேனகா பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/7&oldid=1251469" இலிருந்து மீள்விக்கப்பட்டது