பக்கம்:மேனகா 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

67

கீழே தள்ளி விடுகிறாயா! இது உன்பாட்டன் வீட்டு வண்டியா? ஏறாதே என்று சொல்ல நீயா எஜமான்? இதிலேதான் நான் ஏறுவேன். வா ஒரு கை பார்க்கலாம்; ஆகா! அவ்வளவா!” என்ற கூக்குரலிட்டுப் பாய்ந்து சாமாவையரது கழுத்தில் கையைக் கொடுத்து உள்ளே தள்ளினான். ஐயர் அவனை வெளியில் தள்ளினார். இருவரும் ஒருவரையொருவர் நாயே என்றும், கழுதையே என்றும், வேறு பலவிதமாகவும் அருச்சனை செய்து கொண்டனர். அதனால் அங்கு பெருத்த ஆரவாரம் உண்டாயிற்று. அடுத்த நிமிஷத்தில் ஸ்டேஷன் மாஸ்டர், கார்டு, மற்றவர் முதலிய பலர் கூடிக் குறிக்கிட்டு அவர்களது சண்டையை விலக்கி, வெளியிலிருந்த மனிதனை சாமாவையரிருந்த வண்டிக்குள் ஏற்றிவிட்டு கதவைச் சாத்திற் தாளிட்டுக் கொண்டு சென்றனர். உடனே வண்டி புறப்பட்டது.

சாமாவையர் பதறுகிறார்; அவரது தேகம் வெடவெட வென்று ஆடுகிறது. தமது மனக்கோட்டையை ஒரு நிமிஷத்தில் இடித்து, தாம் அநுபவிக்க இருந்த இன்பதைப் போக்கடித்த அந்த துன்மார்க்கனைக் கசக்கிச் சாறு பிழிந்து ஊதி விட நினைத்து வாயில் வந்த விதம் திட்ட ஆரம்பித்தார். அவர் கூறியதற்கு ஒன்றிற்குப் பத்தாக அந்த மனிதன் திருப்பி மறுமொழி கொடுக்க, இருவரும் வாய்ச்சண்டையிலிருந்து கைச்சண்டைக்கு ஆயத்தமாய் முஷ்டிப் பிரயோகம் செய்யத் தொடங்கினார். வண்டியும் ஸ்டேஷனை விட்டு நெடுந் தூரம் வந்து விட்டது; அவர்களை விலக்குவோர் எவருமில்லை. அதைக் கண்ட கமலம் பெரிதும் அச்சங்கொண்டவளாய் சண்டையை விலக்க நினைத்து சாமாவையரைப் பார்த்து, “போனது போகட்டும்; உட்காருங்கள். கொஞ்சமும் மரியாதை பாராமல் அவ்வளவு பிடிவாதம் செய்து நுழைந்த மனிதரோடு சண்டையைச் செய்வதில் என்ன பலன்? விட்டுவிடுங்கள். நாம் ஒரு ராத்திரி விழித்துக்கொண் டிருப்பதனால் செத்தா போய்விடுவோம்; இப்படி வந்துவிடுங்கள்” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/68&oldid=1251905" இலிருந்து மீள்விக்கப்பட்டது