பக்கம்:மேனகா 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மேனகா

எழுதியிருந்தேன். அதை முடித்துக்கொண்டு இங்கே வந்துவிடுகிறேன். எத்தனை நாள் நீ இங்கிருக்கச் சொன்னாலும் இருக்கிறேன். போகும்போது, நீயும், உன் தாயாரும் என்னோடு கூடவே வந்துவிடுங்கள்; என் உயிர்போகும் வரையில் நான் உன்னை விடுவதில்லை. இது நிச்சயம்; இது சத்தியம்” என்று உறுதியாகவும் உருக்கமாகவும் கூறினார். அதற்குள், “கமலம்! கமலம்! விளக்கெங்கே?” என்று கிழவி பேசிய சப்தம் உண்டானது. கமலம் சுறுசுறுப்பாக விலகி, “சரி! அம்மாள் பால் கொண்டுவந்திருக்கிறாள். கூடத்திலிருந்த ஒரே விளக்கை நாம் எடுத்து வந்துவிட்டோம்; அவள் இருளில் இருக்கிறாள். நமக்கு இனி விளக்கு வேண்டாம். பாலை வாங்கிக்கொண்டு ஒரே முடிவாக வந்துவிடுகிறேன். நேரமாய்விட்டது” என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த விளக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போய்விட்டாள். சாமாவையர் இருந்த அறையை இருள் மூடிக்கொண்டது. அவர் இன்பக் கனவு கண்டு இளகி உருகி ஆநந்த சாகரத்தில் ஆழ்ந்து தமக்குத்தாமே இணையென உட்கார்ந்திருந்தார். திடீரென்று தமக்கு உண்டான பெருத்த அதிர்ஷ்டத்தை நினைத்து விம்மித மடைந்தார். இன்னம் சில நாட்களில், தாமும் அந்த மடமயிலாளும் சென்னைக் கடற்கரை பங்களாவில் இரதியும் மதனும்போல சுகவாரிதியி லாடித் திளைத்திருக்கலாம் என்று நினைத்தார். இன்னம் இரண்டொரு நிமிஷத்தில் அந்தக் காமக்களஞ்சியமாகிய கட்டழகி தமது ஆலிங்கனத்திற்கு வந்துவிடுவாளென்று நினைத்து மனோரதிய மான சுவர்க்கத்தில் கொலுவீற்றிருந்தார். அவரது மனதின் ஆசைகள் அப்போதே உச்சநிலையில் இருந்தன. அவள் தம்மீது கொண்ட ஒப்புயர்வற்ற மையலை எவருக்கும் கிடைக்காத பெரும் பேறாக எண்ணி இன்பமயமாக விருந்தார்.

அப்போது கமலத்தின் கால் பாதரசங்கள் கலீர் கலிரென்று ஒலித்தது, “ராஜாத்தி வருகிறாள்; எச்சரிக்கை, பராக்கு” என்று கட்டியங் கூறின. அந்த ஒசையைக் கேட்க சாமாவையரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/79&oldid=1251919" இலிருந்து மீள்விக்கப்பட்டது