பக்கம்:மேனகா 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயசஞ்சீவி ஐயர்

87

அவளிடம் விஷயத்தைத் தெரிவித்தாளாம்; உடனே துரைஸானி அந்தக் கடிதங்களை எடுத்து அவற்றில் எழுதப்பட்டிருந்த விவரங்களை அறிந்துகொண்டாளாம்: இன்று மாலையில் சாமாவையர் திரும்பவும் வைத்திய சாலைக்கு வந்தாராம்; துரைஸானி அவரைத் தனிமையான ஓரிடத்திற்கு அழைத்துப்போய் தந்திரமாக விசாரித்தாளாம்; அவர் முதலில் சரியான மறுமொழி கொடாமல் தயங்கினாராம்; பிறகு துரைஸானி கடிதங்களைக் காட்டிக் கேட்க, அவர் எல்லா விஷயங்களையும் தெரிவித்தாராம்; கடிதங்களில் எழுதப்பட்டிருந்த சங்கதிகள் நிஜமானவை யென்றும், இந்தப் பெண் நாடகக்காரனோடு ஒடிப்போய் விட்டாளென்றும், கடிதங்களை இவளுடைய பெட்டியிலிருந்து எடுத்த புருஷன் அவமானத்தினால் தற்கொலை செய்துகொள்ள வேண்டு மென்னும் எண்ணத்துடன் மோட்டார் வண்டியின் கீழ் தாமே போய் வீழ்ந்தாரென்றும் சாமாவையர் சொன்னாராம்.

பெரிய:- ஆகா! என்ன தந்திரம் என்ன தந்திரம் அவர்களே எல்லாவற்றையும் செய்துவிட்டு பெண்ணின் மேல் பழியைப் போட்டு விட்டார்களே! அப்பா மகா மோசக்காரர்கள்! பெண் இங்கிருக்கும் சங்கதியைத் துரைஸானி ஒரு வேளை சாமாவையருக்குச் சொல்லியிருப்பாளா?

நூர்:- இல்லை இல்லை. அதை எவரிடமும் சொல்ல வேண்டாமென்று நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எவரிடமும் அவள் சொல்லவே மாட்டாள். -

பெரிய:- அவர் பிழைப்பாரா? துரைஸானி என்ன சொன்னாள்?

நூர்:- அவர் இன்னும் கண்ணைக் கூடத் திறக்கவில்லையாம். அங்கே அவருடைய நிலைமை அப்படி இருக்கிறது; இங்கே இந்தப்பெண்ணிருக்கும் நிலைமையோ பரிதாபகர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/88&oldid=1251951" இலிருந்து மீள்விக்கப்பட்டது