பக்கம்:மேனகா 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மேனகா

கொடுத்தாராம்; அதில் அவரை வேலையிலிருந்து நீக்கி வைத்திருப்பதாக உத்தரவு செய்யப்பட்டிருந்ததாம்; அதை வாங்கிக்கொண்டபின் அவர் வைத்தியசாலை, நாடகக்காரன் வீடு முதலிய இடங்களுக்குப் போனாராம்; நேற்று இராத்திரி அவருடைய வீட்டில் பெருத்த கொள்ளை நடந்ததாகவும், அவருடைய மனைவி கடுமையாக அடிபட்டுக் கிடப்பதாகவும் தந்தி வந்ததாம்; உடனே அவரும் அவருடைய தாயாரும் புறப்பட்டுப் போய்விட்டார்களாம் - என்றாள்.

அதைக் கேட்ட பெரிய தம்பி மரக்காயரது தேகம் கிடுகிடென்று ஆடியது; அவர் பெருத்த வியப்பும் திகைப்பும் அடைந்தார். “ஆ! என்ன ஆச்சரியம்! இது உண்மைதானா ஒரு மனிதருடைய தலையின் மேல் இத்தனை இடிகள் விழுமோ! அவருக்காவது வேலைபோகவாவது! அவர் எவ்விதமான குற்றமும் செய்யமாட்டாரே! எந்தப் போலீஸ் ஸ்டேஷனில் உத்தரவு கொடுத்தார்களாம்?”

நூர்:- பீட்டர் சாலையிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தார்களாம்; அதன் விவரம் தெரியவில்லை - என்றாள்.

அதைக் கேட்ட பெரியதம்பி மரக்காயர் மிகவும் ஆழ்ந்து யோசனை செய்தார்; தமது ஹுக்காவின் காம்பை வாயில் வைத்து வலுவாக நாலைந்து முறை இழுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு ஐந்து நிமிஷ நேரம் நிஷ்டையில் இருந்தார். பிறகு ஏதோ நினைவைக் கொண்டு திடுக்கென்று எழுந்து எதிரிலிருந்த ஒரு மேஜைக்குச் சென்றார்; டெலிபோன் (Telephone) என்னும் செய்தியனுப்பும் கருவி அதன் மீதிருந்தது: அதை எடுத்து வாயிலும் செவியிலும் வைத்துக்கொண்டு பீட்டர்சாலைப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்த சமய சஞ்சீவி ஐயருடன் பேசினார். உடனே புறப்பட்டு தமது பங்களாவுக்கு வரும்படி ஐயரிடம் சொல்லிவிட்டுத் திரும்பவும் வந்து தமது ஆசனத்தை அடைந்தார்; “என்ன செய்வ தென்பது தோன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/91&oldid=1251959" இலிருந்து மீள்விக்கப்பட்டது