பக்கம்:மேனகா 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயசஞ்சீவி ஐயர்

91

வில்லை. இந்தப் பெண்ணின் தகப்பனார் இங்கிருந்தால்; அவரிடம் பெண்ணை ஒப்புவித்து விடலாம்; நம்முடைய கவலையெல்லாம் தீர்ந்துபோகும். அவரோ ஊருக்குப்போய் விட்டார்; இவளுடைய புருஷன் வீட்டில் கொண்டுபோய் விடுவோமானால், இவளுடைய நாத்திமார்கள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்; ஒருக்கால் சேர்த்துக் கொண்டாலும் இந்த நிலைமையில் விஷமிட்டுக்கொன்றாலும் கொன்று விடுவார்கள்; வைத்தியசாலையிலுள்ள புருஷனோ இன்னும் கண்ணைக்கூடத் திறக்கவில்லை; பிழைப்பதே சந்தேகமாக யிருக்கிறது. அவர் கொஞ்சம் தேறி குணமடைந்தாலும், இவளைப் பார்த்தால் அவருக்குப் பெருத்த ஆத்திரமுண்டாவது நிச்சயம். அது அவருடைய தேகத்திற்குத் தீங்கை விளைவிக்கும்; இப்போது நாம் என்ன செய்வ தென்பது தோன்றவில்லை” என்றார் பெரியவர்.

நூர்:- இவள் இதற்கு முன் பாலையாகிலும் கொஞ்சம் குடித்தாள். இப்போது தன்னுடைய புருஷனைக் காண வேண்டு மென்னும் கவலையில் பாலும் வேண்டாமென்றும் விலக்கி விட்டாள். இவள் இப்படியே இரண்டொரு நாள்களிருந்தால் இவ்விடத்திலேயே உயிரை விட்டுவிடுவாள் போலிருக்கிறது. இது நமக்குப் பெருத்தவதையாக இருக்கிறது. பார்க்கச் சகிக்க வில்லை. என்னைக் காணும்போதெல்லாம் இவள் கெஞ்சி மன்றாடுவாள்; என் மோவாயைப் பிடித்து வேண்டிக் கொள்ளுகிறாள். எப்படியாகிலும் தான் தன்னுடைய புருஷனைப் பார்க்கவேண்டும் என்கிறாள். பைத்தியங் கொண்டவளைப்போலப் பிதற்றுகிறாள்- என்றாள்.

பிறகு இருவரும் சிந்தனையில் ஆழ்ந்து தம்மை மறந்து பத்து நிமிஷ நேரம் மெளனமாக இருந்தனர்.

அப்போது ஒரு வேலைக்காரி அவ்விடத்திற்கு வந்து, வெளியில் பைசைக்கிலில் யாரோ ஒருவர் வந்திருப்பதாகவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/92&oldid=1251960" இலிருந்து மீள்விக்கப்பட்டது