பக்கம்:மேனகா 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயசஞ்சீவி ஐயர்

97

சாம்பசிவத்திற்கும் அவரது குடும்பத்தாருக்கும் எவ்வளவு கொடுந் துன்பங்கள் இழைக்கக் கூடுமோ, அவ்வளவையும் செய்ய பிள்ளையவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார். தமக்குத் தகுந்த துணைவரான தாந்தோனி ராயருடன் சேர்ந்துகொண்டு பல சூழ்ச்சிகளைச் செய்ய ஆரம்பித்தார். ராயர் கலெக்டர் துரையின் மனதில் பகைமையை மூட்டி சாம்பசிவத்திற்குத் துன்பங்களை உண்டாக்கினது முன்னரே தெரிந்த விஷயம். டிப்டி கலெக்டர் அவரது மைத்துனனான கிட்டன் மூலமாகவும் பலரிடம் லஞ்சம் வாங்கினா ரென்று அநேகம் சாட்சிகளைத் தயாரித்து அவர்களிடம் வாக்குமூலமும் பெற்று பெரிய கலெக்டரிடம் கொடுத்திருந்தார். கிட்டனது அறியாமையினால், கேஸ்களின் தீர்மானங்களை உணர்ந்த சேவகர்களிற் சிலர் சாம்பசிவத்தின் பெயரைச்சொல்லிப் பணம் வாங்கினதாக முன்னரே சொல்லப்பட்ட தல்லவா. அவ்வாறு பணம் கொடுத்தவர்களில் சிலரும் சாட்சி சொல்லத் தயாராக இருந்தனர்.

அந்த நிலைமையில் சாம்பசிவமும் கனகம்மாளும் பெண் காணாமல் போனது பற்றி தந்தி வந்தவுடன் சென்னைக்குப் போன தினத்தன்று பிள்ளையவர்கள் ராயருடன் அவசரமாகத் தனிமையில் பேசவேண்டு மென்று செய்தி அனுப்பினார். ராயர் இரவு 8-மணிக்கு வருவதாகச் சேவகன் மூலமாகச் செய்தி சொல்லி அனுப்பினாரல்லவா. அவ்வாறே காலந் தவறாமல் ராயர் பிள்ளை அவர்களின் வீட்டிற்குச் சென்று, அன்று நிகழ்ந்த சம்பவங்களையும்,தாம் சாம்பசிவத்தின் விஷயத்தில் சொன்ன கோள்களையும், அதனாலுண்டான பலன்களையும் விரித்துக் கூற, புளுகுமலைப் பிள்ளையின் மனம் குளிர்ந்தது. தங்களது பகைவரின் வீழ்ச்சியைக் குறித்து இருவரும் கரைகடந்த மகிழ்வெய்தி, அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிகவும் பழித்து ஏளனம் செய்து பலவாறு தூற்றி நகைத்துக் கொண்டிருந்தனர். சாம்பசிவத்தை வேலையினின்று நீக்கி

மே.கா.II-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/98&oldid=1251973" இலிருந்து மீள்விக்கப்பட்டது