பக்கம்:மேரியின் திருமகன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஆண்டவருடைய ஆவி என் மேலே
என்னை அபிஷேகம் செய்துள்ளார்
எளியவர்க்கு நற்செய்தி சொல்ல வந்தேன்
குருடர்க்கு பார்வை கொடுப்பேன் கூன் நிமிரும்
ஒடுக்கப்பட்டவர் உரிமை பெறுவார்

என வரிகள் தொடர்ந்தது ஏட்டைச் சுருட்டினார்
இறைபணியாளனிடம் கொடுத்து, இன்று படித்த
கருத்துக்கு காட்சி நானே என நடந்தார்
சூசையின் மகனன்றோ இவரென்று வியந்தனர்


அற்புதங்கள்

திருமணம் ஒன்றுக்காக கானாவூர் சென்றார்
அன்னை மரியாளும் கலந்து கொண்டார்
அங்கே விருந்து அமளிபட்டது
இடையில் திராட்சை ரசம் தீர்ந்த படியால்
அன்னை மகனிடம் ஆவன செய்யென்றார்
ஆண்டவரும் அற்புதம் செய்யத் தயங்கினார்
ஆயினும் அன்னையின் சொல்லுக்காக
கற்சாடிகளை கொண்டு வரக் கேட்டார்
நீரை நிரப்பென்றார். பந்திக்காரன் பரிமாறினான்
வெற்றுநீர் கனிச்சாறாய் இனித்தது வியந்தனர்
சாலையில் ஒருநாள் சென்று கொண்டிருந்தார்
தாவீதின் குமாரனே எங்கள்மேல் இரக்கமாயிரும்
என குருடர் இருவர் கூப்பாடு போட்டனர்
பரிந்து அவர் குறை கேட்டார். பார்வை கேட்டனர்