உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 35 தெரிய, உண்மை வெளிப்பட, உழைப்பு பலனளிக்க கட்டாய இந்தி நல்ல வாய்ப்பாக விளைந்தது. நம்மில் எத்தனை எத்தனை தாய்மார்கள் சிறைக்கோட்டம் புகத் தயார் என்பதை அது எடுத்துக் காட்டிற்று. எத்தனை வாலிபர்கள் இனப் போராட்டத்திற்கு இசைந்துள்ளார்கள் என்பதை அது விளக்கிற்று, தாலமுத்து, நடராசன்போல் தமது உயிரையும் தரும் மணிகளின் ஒளி தெரிய அது உதவிற்று. யாதொரு வர் அன்று அவதிப்பட வைத்தது. அதன் பின் இன்று ஐயாயிரவருக்கு மேல் நான்-நீ என்று சிறை செல்வதற்கு முந்தும் உணர்ச்சியைத் திராவிட இனத் திலே தட்டியெழுப்பியுள்ளது; இன எழுச்சித் தீ நாடெங்கும் பரவியுள்ளது. இதைக் கண்டு தேசீய வாதிகள் சலிப்புறலாம்; விசாரமும் அடையலாம். நமக்கென்ன அதைப் பற்றி! நம் வேலை நமக்கு. நாடோடிகள் அல்ல நாம் நாடில்லையே என்று நாதி யற்று நலிய; தொடை நடுங்கிகளல்ல நாம் தோல்வி கண்டு தேம்பியழ; நம்மிடம் தைரியமுண்டு; போராட நெஞ்சுரமுண்டு. காரணம்? துடுக்குத்தனமா? துன் மார்க்கமா? அல்ல பத்திரிகை பலமா? பிரசார பலமா? அல்ல, அவை எல்லாம் காங்கிரசுக்குத்தான் அமோக மாசு உண்டு. நம்மிடம் அமைப்பு இல்லை, பத்திரிகை இல்லை, பிரசாரம் இல்லை, மணம் இல்லை, பதவி இல்லை. பின் எதனால் இத்தனை வீரம் தீரம் நெஞ் சுரம் எல்லாம்? நம்மிடம் நீதி நிறைந்திருக்கிறது. மானிட உரிமை மட்டற்று விளங்குகிறது, ஜீவசக்தி இருக்கிறது என்ற காரணங்களால்.