உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மே தினம் நாம் மறந்த இன உணர்ச்சியை மறுபடி தேடவும், இழந்த இன்பத்தைத் திரும்பப் பெறவும், தேய்ந்த இலட்சியத்தைப் புதுப்பிக்கவும், மருண்ட மனத்தை மலர்விக்கவும், கொண்ட கருத்தை முடிக்கவும் வகை யான வழி கோலலாம். வாழ்வில் அது வளம் தரும். அதன் பின்னால் நம்மைப் பார்க்கத் தேடி வருவார் கள் அவர்கள். இது நிச்சயம். பதவி அன்று எட்டு மாகாணங்களிலே கொட்டு முழக் குடன் 'கொடியேந்திக் கோலாகலத்துடன் ஏற்றது காங்கிரஸ். குறைந்தது. ஒரு நூற்றாண்டுக்கும். எங்களை எவரும் அசைக்க முடியாது. அப்புறப்படுத்த முடியாது என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தது அப்போது. ஆனால் நடந்ததென்ன? 2 ஆண்டுகட் கெல்லாம் தானே வலிய ஓடிப்போக நேர்ந்தது. நம் மாகாணத்தில் மட்டுமென்ன? ஆச்சாரியார். அடைந்த அல்லல்கள், கேட்ட நிபந்தனைகள் குறைவற்றவைகளா? அவர் சென்ற இடமெல்லாம் கறுப்புக் கொடியுடன் கண்டனக் கூட்டங்கள்; திரும்பிப் பார்த்தால், செய்த தீச்செயல்களைப் பற்றிய கண்டனக் கூச்சல்; புகையிலை வரி, விற்பனை வரி இன்ன பிற எல்லாவற்றிலும் எதிர்ப்பைக் கண்டார். ஏளனத்தைக் கண்டார். அவர் புகுத்தின கட்டாய இந்தியும், நம்மை நாம் உணர்ந்து உணர்ச்சி பெற்று உழைக்கத்தான் உதவிற்று; திராவிட உணர்ச்சி தலையெடுக்க உதவிற்று. அவர் அடக்குமுறையால் நம் உணர்ச்சி மாளவில்லை; மாறாக உத்வேகம் பெற்று ஓடியது ஊற்றுப்போல, இன உணர்ச்சி பொங்கி வழிய, நம்முடைய தியாகம்