உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை 33 உங்களுக்காக! உங்கள் நாட்டின் சமுதாயத்தின் உயர் வுக்காக; திராவிடத்தின் சீரும் சிறப்பும் ஓங்குவதற் காக மக்கள் மனம் மகிழ்வதற்காக; சமத்துவம் தாண்டமாடுவதற்காக; அல்லல்கள் அழிந்தொழி வதற்காக; ஏழ்மை போவதற்காக; இன்ப வாழ்வு வாழ்வதற்காக. சமீபத்திலே காங்கிரஸ் காரியதரிசி, ஆசார்யா கிருபாளினியை ஒருவர் கேள்வி கேட்டார், காங்கிரஸ் எவ்வளவு காலம் இருக்கும் என்று. அதற்கு அவர். பதிலளித்தார். சுயராஜ்யம் வந்துவிட்டால் காங்கிர சுக்கு வேலையில்லை என்று. அவர்களுக்கு வேண்டு மானாலும் அப்போது வேலையில்லாதிருக்கலாம். சுய ராஜ்யம் கிடைத்தது. காங்கிரசே நாடாண்டா" லும் நமக்கு வேலையதிகம்; நம் கட்சியும் மிகமிகச் சுறுசுறுப்புடன் வேலை செய்யும். ஏன்? நம்முடைய குறைகளைத் தீர்த்துக்கட்ட, இப்போது நாம் எதைச் சொல்லினும் சிந்தியாமல் ஏகாதிபத்திய தாசர்கள் என்று ஏய்க்கப் பார்க்கிறார்கள்; மக்களை ஏமாளி களாக்குகிறார்கள்; ஆங்கிலேயனின் அடிமை என்று கதை கட்டுகிறார்கள். அப்போது நேரடியான போராட்டம் நடக்கும். அதற்காக இப்போது கச ரத்து பழகிக்கொள்வோம், இன எழுச்சியின் மூலம். அது தவிர தற்போது வேலையில்லை, இன உணர்ச்சி - இன எழுச்சி என்பதைத் தவிர்த்து. சட்டசபையின் சிறப்பை, மந்திரி மண்டலத்தின் மாண்பை, நிர்வாக சபையின் நிம்மதியை, அதிகாரத் தின் ஆனந்தத்தை காங்கிரஸ் வேண்டுமானால்' கண்டு களிக்கட்டும், பெற்றுப் பெருமிதமடையட்டும், மே-3.