உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மே தினம் களை யொழிப்பது புத்துலகம் சமைப்பது, இன்ன பிற கூட்டு மந்திரி சபையோ அன்றிக் கலப்படமற்ற காங்கிரஸ் மந்திரி சபையோ எது ஏற்படினும் ஏற்பட் டதும்; அது பற்றிக் கவலை இல்லை. களிப்பில்லை, காயவும் இல்லை நாங்கள். இப்போது வேலையதிகம் எங்களுக்கு, வீணர்களாய்த் திரிவதற்கல்ல; சொல் வீரர்களாய் விளங்கவுமல்ல; வன்மையான திட்டங்களை வகுத்துக் காட்ட முயற்சியுண்டு. முக்கிய லட்சியங்களைத் தீர்த்துக்கொள்ள, கிளர்ச்சியுண்டு கடமையை நிறைவேற்ற, எழுச்சியுண்டு இனத்தைக் காப்பாற்ற. சட்டசபை நுழைவு காரமற்றது; அதிகார பீடம் வெறும் ஆர்ப்பாட்டம்; சர் பகதூர் பட்டங்கள், வெறும் பகல் வேஷம்; மந்திரிப் பதவி முதலியன மாய் ஜால அரசியல்வித்தை என்பது அறிந்தோம்; மயக் கம் தெளிந்தோம். இன உணர்ச்சியற்ற நிலைமையில் இவை யாவும் இன்னல் விளைவிப்பவையே என்பது திண்ணம், நம் எதிர்கால வேலை மகத்தானது, மட் பற்றது. மடமையைப் போக்குவது, கடமையைக் கடைப்பிடிக்கச் செய்வது; இன உணர்ச்சி, திரா விடர் நாம் என்ற எழுச்சியை ஏற்படுத்துவதுதான்; திராவிட நாட்டைத் தனி நாடாகக் காண்பதுதான்; இதுதான் நம் திட்டம்; குறிக்கோள். நாங்கள் சொல் வதைச் சற்றே கேளுங்கள்! பரிசீலனை செய்து பாருங் கள் பகுத்தறிவுடன்! கூர்ந்து நோக்குங்கள் குறை யுள்ளதா என்று. பின்னர்ப் பின்பற்றுங்கள் எம்மை, எம் திட்டத்தை, குறிக்கோளை எமக்காக அல்ல