உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்றவர்கள் நுணுக்கம் சி. என். அண்ணாதுரை இல்லை; வெட்கம் இல்லையா இல்லை; துக்கமில்லையா என்றால் அதுவுமில்லை; பின் நீங்கள் என்ன சுரணை என்று கேட்டால், இல்லை. ஆனால் இருக்கிறோம் என்றால் நாங்கள் தெரிந்தவர்கள். இந்தச் சர்க்கார் உதைக்கும் காலுக்குத்தான் முத்தம் என்று முறை வைத்துக் கொண்டுள்ளது. நாங்கள் இப்போது உதைக்கக் காலைத் தயார் செய்து வருகிறோம். எனவேதான் சும்மா இருக்கிறோம். நம்மை நாம் பலம் படுத்திக் கொண்டு நம் லட்சியப் பாதையில் முன் னேறிக்கொண்டே செல்வோம். பின்னால் ஒரு காலம் வரும். அப்போது இந்தச் சர்க்கார் நம்மைப் பின் தொடர்ந்து அழைப்புவிடுக்கும். அப்போது நாம் வரச் சந்தர்ப்பமில்லை, வேறு பல வேலைகள் எமக்கு உண்டு என்று இறுமாந்து கூறலாம். அந்நாள் அண்மை யில் வந்தே தீரும். காங்கிரஸ் சட்டசபைப் பிரவேசத்தால் சந்தோ ஷமோ, சலிப்போ இல்லை நமக்கு. அதிகாரத்தில் அமர்வதால் அகமகிழ்வோ, அல்லது அழுக்காறோ அடைபவர்களல்லர் நாம்; அந்தச் சட்டசபை, அதி காரம் யாவும் நம் கட்சி கண்டவைதான்; ஒரு பதி னைந்து ஆண்டுகள் அனுபவித்தவைதான். இன்று அவை வேண்டாம் நமக்கு வேறு பல வேலைகளிருப் பதால். இன்று நம் வேலைகள், நாட்டிலே இன உணர்ச்சியைத் தட்டி எழுப்புவது. இன இழிவைப் போக்குவது, திராவிட நாட்டுக் கிளர்ச்சிக்கான ஆக்கம் தேடுவது, திராவிடப் பண்பை மக்களிடைப் பக்குவமாகப் பரப்புவது, புதுமை காண்பது, பூசல்