உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மே-தினம் சுலபம். சமூகம் ஒரு தனி இனம் என்ற உண்மை ஒப்புக் கொள்ளப்பட்டதைக் கண்டு நாம் களிப்படையத் தான் வேண்டும் எப்படி? கனமான சுவரைப் பெயர்த் தெறிவது கடினம் ஆனால் ஒரு கல்லைப் பெயர்த்து விட்டால் மற்றவற்றைப் பிரித்தெடுப்பது பாகிஸ்தான்கிடைத்தஒருசில ஆண்டுகளுக்குள் நிச்சய மாக திராவிடர் தனி இனமாகத் திராவிட நாட்டைப் பெறுவர். இன்றேல் என் போன்றோர் பேசுவதும் உம் போன்றோர் உழைப்பதும் பலனற்றே போகும். ‘பாகிஸ்தான்’ கிடைத்திருக்கிறது வேல் திட்டப் படி. ஆனால் ஜின்னா கோபிக்கிறாரே ஏன்? என்று கேட்கலாம். காரணமுண்டு அதற்கும். திட்டப்படி நிர்வாக சபையில் இந்துக்களுக்கு 5 ஸ்தானம்.என்றால் முஸ்லிம்களும் 5 -ஸ்தானம் பெறுவர். சரி; முழுதும் ஒப்புக் கொள்ளக்கூடியது. ஆனால் இந்துத் தொகுதி யோடு சீக்கியர் ஒன்று, ஆதி திராவிடர் ஒன்று, ஆங்கில அரசாங்கம் தேர்ந்தெடுப்பது ஒன்று என மேலும் பல ஸ்தானங்கள் உண்டு. இவை இந்துக்க ளோடு சேர்ந்தால் இந்துத் தொகுதி ஐந்து என்பது. மறைந்து ஒன்பது என்றும் அதற்கு மேலும் ஆகி விடுமே! இது 'பாகிஸ்தான்' என்று காட்டி சூது ஸ்தானாக விளங்குகிறதே! 'பாக்கிஸ்தான் பாக்கிஸ் தான் என்று கேட்டால் 'பாதகஸ்தான்' தருகிறாயே என்று கேட்கிறார் ஜின்னா: முறைதானே! சிம்லா மகாநாட்டுக்கு உங்களை அழைக்க வில்லையே, உங்களுக்கு வேதனை இல்லையா என்றால்