உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை காலிகள், கூலிகள். ஆனால் இன்று முஸ்லிம் சமு தாயம் தனி இனமாக ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. எனவேதான் இந்துக்களோடு சரிசமஉரிமை தரப்பட் டது முஸ்லிம்களுக்கு. இனத்துக்கு இனம் பேதம் காட்டக்கூடாது என்ற கருத்திலே இந்துக்கள் ஓர் இனம், முஸ்லிம்கள் வேறு இனம் என்ற அடிப்படை உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. ஒரு காலத்திலே முஸ்லிம் இனம் ஆங்கில சர்க்கா ரால் ஒரு சிறுபான்மையான சமூகமாகக் கருதப் பட்டது; காங்கிரஸ்காரர் அதனைச் சமுதாயத்திலே ஓர் அங்கமாக அளவிட்டனர்; வெளி நாட்டார் என்று இந்துக்கள் வேற்றுமை கொண்டாடினர். ஆனால் இன்று அந்த முஸ்லிம் இனம் ஒரு தனி இனமாகக் கொள்ளப்பட்டுவிட்டது. ஜனாப் ஜின்னா அவர்களின் இடையறாக் கிளர்ச்சியினால்; அவர் முஸ்லிம் தோழர்களிடை ஊட்டிய இன உணர்ச்சியின் விளை வால் அவர் பாகிஸ்தான் கேட்டபோது பலரும் அதனை எதிர்த்தனர். பாரத மாதாவைத் துண்டா டுவதா? பச்சைக் குழந்தையை வெட்டிக் கூறு போடு வதா? என்று சூழ்ச்சி பேசினர்; கபட எண்ணத்துடன் கதைகள் கட்டினர். அவர்கள் எண்ணம் ஈடேற வில்லை. ‘பாகிஸ்தான்' பெற்றுவிட்டனர். சில தோழர் கள் கேட்கலாம். முஸ்லிம்களுக்குப் 'பாகிஸ்தான் (இந்துக்களோடு சம உரிமை) கிடைத்ததைக் கண்டு நீங்கள். ஏன் களிப்படைகிறீர்கள் என்று. ஆம்; உண்மையிலே களிப்படைய வேண்டியவர்கள்தான் நாம். ஏன்? இந்துக்களோடு மொழி, கலை, நாகரிகம் இன்ன பிறவற்றில் முற்றும் மாறுபட்ட முஸ்லிம்