உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மே தினம் டுக் கலவரங்களுக்குக் காரணஸ்தர்கள் என, எந்தச் சர்க்காரால் கருதப்பட்டார்களோ, எந்தக் காங்கிரஸ், நாட்டிலே புரட்சித்தீயை வாரிவாரி வீசி அமைதியை அழித்துக் கலவரத்தைக் கிளப்பியது என்று எந்தச் சர்க்காரால் குற்றப்பத்திரிகை படிக்கப்பட்டதோ, எந்தக் காங்கிரஸ்காரர்கள் கலவரக்காரர்கள் என்று எந்தச் சர்க்காரால் தீர்ப்பளிக்கப்பட்டுக் கால வரை யறையின்றிக் காவலில் தள்ளப்பட்டனரோ, அந்தச் சர்க்காரே அதே காங்கிரஸ் தலைவர்களை விடுதலை செய்தது. அவர்கள் விடுதலையை நான் மனப்பூர்வ மாக வரவேற்கிறேன், வாருங்கள் வாருங்கள் என்று! வாடி வதங்கி வெளியே வரும் காங்கிரஸ் தலைவர் களை வரவேற்கிறேன், இனியாவது வகையற்ற வழியைப் பின்பற்றாது, நாட்டுக்கு நலன் தரும் திட் டத்தைத் தீட்டுங்கள் என்று. அவர்கள் செய்த தியா கம், பட்ட கஷ்டம், அடைந்த அல்லல்கள் அனைத் தும் விழலுக்கிறைத்த நீராகிறதே! அதை மாற்றுங் கள் மக்களுக்குப் பணியாற்றும் பண்பிலே என்னும் எச்சரிக்கையுடன் நல்வரவேற்கிறேன். அன்று காங்கிரஸ்காரர்களால் புறக்கணிக்கப் பட்ட முஸ்லிம்லீக் இன்று இந்துக்களோடு சமஉரிமை பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்குமுஸ்லிம் சமுதாயத் தின் கிளர்ச்சியே காரணம். இந்த வெற்றி முஸ்லிம் களின் கிளர்ச்சி அத்தியாயத்திலே முதலிடம் பெறத் தக்கது. ஏன்? பண்டிதர் ஜவஹர் மொழிப்படி பார்த் தால் இந்தியாவிலே இரண்டே இரண்டு கட்சிகள் தான் இருக்கும். ஒன்று காங்கிரஸ், மற்றொன்று சர்க் கார், மற்றகட்சிகள் எல்லாம் ஏகாதிபத்தியதாசர்கள்,