உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு தோழர்களே! நான் குடந்தை வந்து நெடுநாட் களாகின்றன. குடந்தைவாசிகள், மகாமகா காலத் திலே மாபாதகங்களைத் தீர்த்துவைக்கும் மகிமை பெற்ற மகாமக குளத்திலே மூழ்கித் தத்தம் பாபங் களையெல்லாம் போக்கிவிட்டிருக்கும் புனிதமான (!) காலத்திலே வந்துள்ளேன். ஆம்; முன்வந்த முறைக்கும் இப்போதுவந்த முறைக்குமிடையே பலப்பல மாறுதல் கள். அப்போது சண்டை வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது; இப்போது சண்டை நின்று சமாதானம் நிலவுகிறது. அன்று நாட்டிலே ஆகஸ்டு கலவரம் எதிரொலித்துக்கொண்டிருந்தது. இன்று கலவரம் நின்று காங்கிரஸ்- சர்க்கார் ஆட்சி ஏற்பட் டிருக்கிறது.நாட்டிலே இப்படி நானாவித மாறுதல் கள் நடந்துள்ளன: நடக்கின்றன. நம் கட்சியுங்கூட, சேலத்திற்குப் பிறகு மகத்தான மாறுதல்களடைந் துள்ளது. மாறுதல்கள் இயற்கையாக நிகழும்; நிகழ்ந்தே தீரும். அதில் ஒன்றும் தவறு இல்லை, இன்று அரசியல் உலகில் மாபெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது; ஏன்? பெரிய கொந்தளிப்புங்கூட ண்டாகியுளது, எந்தக் காங்கிரஸ்காரர்கள், ஆகஸ்