உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 37 பத்திரிகை, பிரசாரம், அமைப்பு என்பன எவையும் இல்லை. இருந்தும் ஒருசில மாதங்கட்குள்ளே 60 ஆயிரம் போதுள்ளனர் நம் கழகத்திலே. இது நீதிக்கட்சியின் வரலாற்றிலேயே பெருமையான கட்டம் என்றால் மிகையல்ல. எண்ணிப்பாருங்கள் எப்படிப்பட்ட அங்கத்தினர்கள் இவர்கள் என்று? இவர்களை அங்கத்தினர்கள் என்பது அவ்வளவு பொருத்தமல்ல தொண்டர் படை என்பது மிகப் பொருந்தும். எதற்குத் தொண்டர் படை? தேர்தல் வேலைக்கா? எடுபிடி ஆட்களாகவா? மலர்மாலை சூட்டவா? கவர்னரின் கைலாகு பெறுவதற்கா? பின் மன்னர் பேட்டிக்காகவா? இல்லவே இல்லை. எதற்கு? இனத்துக்காக இரவும் பகலும் பாடுபட் அவசியமானால் சிறைக் கதவுகளையும் சென்று தட்டு வதற்குத் தயாராய் இருக்கும் காளைகள் இவர்கள். எனவே வே நம் எதிர்காலத் திட்ட வேலையெல்லாம் காங்கிரசின் கபடத்தினின்றும் விலகி, கருத்தோடு கடமையைச் செய்து, வெற்றிதோல்வி பற்றிக் கவலை யின்றி நம் நிரந்தரப் பிரச்சனையைத் தீர்க்க திராவிட நாட்டைத் தனி நாடாகக் காண; உறுதி யுடன் ஊக்கத்தோடு உழைப்பதற்கே. அடிப்படையை அடைவதைத் தவிர நமக்கு வேறு வேலையில்லை. திராவிட நாடுதான் நம் எதிர் கால வேலைத்திட்டம். அதனை அடைந்தே தீரு வோம். எனவே, நாம் நம்மில் எவரும் எக்காலத்தும் எந்நிலையிலும் "நான் திராவிடன்” என்று சொல்ல வும் எண்ணவும் தயங்கக் கூடாது. அது பிழையென்று பின் வாங்கக்கூடாது.