உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மே தினம் ஆம், திராவிடர் நாம் என்ற இன உணர்ச்சி நம் மிடை எழுச்சியடையவேண்டும்.எனவேதான் ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடர் கட்சி என அழைக்கிறோம். இது நம்முடைய மாற்றுத் தோழர்களிடையே மாற்றத்தையும், கூட்டுத் தோழர்களிடையே கொந் தளிப்பையும் உண்டாக்கியது. அடிப்படையில் மாற்றம் செய்தோம் இன்று, அன்று நீதிக் கட்சி அதன் ஆரம்ப காலத்திலே, நீதி கேட்கும் சபையாக, ராஜி பேசும் சபையாக, இன்னும் சொல்லவேண்டுமானால் ஒரு வகுப்பாரின் பஞ்சாயத்துச் சபையாக விளங்கியது. 100-க்கு 97 பேர். பாடுபடுபவர்கள் நாங்கள்: 3 பேராகிய ஆரியர்கள் உயர்ந்த பதவிகளிலே அமர்ந்து ஆளுகின்றீர்களே, இது நீதியா? பெரும்பெரும் உத்தி யோகங்களில் ஆரியர்களே அதிகம்; மற்றவர் மிகமிகக் குறைவு. இது முறையா? எங்களுக்கும் அதிகாரத்தில் கட்சி பங்குவேண்டும், தாருங்கள் என்று நீதிக் கேட்டது அன்று. நாங்கள் உழைக்க, வேறு ஒருவர் உண்டு களிப்பதா? இது நல்லதா என்று நீதி கேட்டது. கூக்குரலிட்டது. ஆனால் பலன்? ஆள் சர்க்கார்; ஆனால் அதை ஆட்டி நீதி கிடைக்குமா அங்கு? நாம்வபம் உ கேட்கவேண்டும்? ஆங்கில ஆரியம். ஏன் அவரிடம் நீதி புலியிடம் மான் மன்றாடி மனம்வைத்து உயிர்ப் அ பிச்சை அளிக்கும்படி வேண்டுவது இயற்கை: நடக்கக் கூடியது. ஆனால் புலி, மானிடம் பயந்து அடங்கி ஒடுங்கி நடுங்கி உயிர்ப்பிச்சை கேட்பது என்றால் இது விவேகமுள்ள பேச்சா? மிசுவிசித்திரமானது அல்லவா? அது போலத்தான் அன்று பார்ப்பனரல்லாதார்