உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 39 பார்ப்பனரிடம் தம்மை நல்ல முறையிலே நடத்தித் தம் வகுப்புக்கு நீதி வழங்கும்படி கேட்டனர். இது விசித்திரமான காரியம். ஏன்? பெரும்பான்மையோர் சிறுபான்மையோரிடம் உரிமை வேண்டி நின்றது விசித்திரம்; எனவே வழங்கப்படவில்லை நீதி. ஏன் இன்றும் அந்த இழிநிலை நம்மிடம்? இந்த நாட்டுக்கு உரிமையாளரான இனம், நாடாண்ட இனம், நாடாளப்போகும் இனம், நாகரிகம் மிகுந்த இனம், சரித்திரப் பிரசித்தி பெற்ற திராவிடர் இனம்; இலக் கியத்திலே இன்பம் கண்ட இனம், வீரமிக்க இனம், வீணர்களிடம் வாதுபுரிந்து ஏன் நீதி கேட்கவேண்டும்? கேட்டும் ஏன் நீதி கிடைக்கவில்லை? என்று துருவித் துருவி ஆராய்ந்தோம். நாம் திராவிடர்;நம் இனம் - திராவிட இனம்; நம்முடைய நாடு திராவிட நாடு என்று கண்டோம். நாம் யார் என்று கண்டோம். நமக்காக உழைக்கும் கட்சியை நம் இனப்பெயரால். உக்குறிச் சொல்லால் அழைக்கலானோம். அதுதான். நீதிக் கட்சியென்னும் திராவிடர் இயக்கம். வீடு இடிந்து தாறுமாறாகக் கிடந்தது; அழகு இழந்திருந்தது. அதைப் புதுப்பித்தோம். எப்படி? 'இனி எக்காலத்துக்கும் எதற்கும் ஆடாது அசையாது வே, அதன். நின்று ஈடுகொடுக்கும்படி : அத்தனை உறுதியாக அமைத்தோம்; அமைக்குமுன் அஸ்திவாரத்தைக் கொஞ்சம் கெட்டிப்படுத்தினோம்; அவ்வளவுதான்; அடிப்படை ஆணிவேர்போல் மேலுள்ள வீடு அற்புதமாக பையும் பூசல்களையும் 45370 9 சிலம் கன் ச்சரிப் மருளந்துவLபுகழையும் MARATD LIBGARY MAGRA-1