உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மே தினம் நிந்தனையையும் பொருட்படுத்தாது, அடிப்படை யைப் பலப்படுத்தினோம். பொச்சரிப்புக்காரர்களை போவென்றோம், 'புதையல் கிடைக்கும்' பூமான் களாய் வாழலாம் என்றிருப்போரை உங்களுக்கு வேலையில்லை பட்டம் நடவுங்கள் என்றோம். செப்பனிட்டோம். பதவிப் பித்தர்களை விரட்டியடித்தோம். ஆம்! இடிந்த வீட்டைச் அஸ்திவாரத்தைப் பலப்படுத்தி, கூரை வேய்ந்து, சுற்றுச்சுவர் எழுப்பி கூடகோபுரமாகக் கட்டினோம், அந்த வீட்டைக் கட்டுங்கால் எங்கள் நரம்பையும் நாராகக் கொடுத்திருப்போம். எங்கள் உழைப்பால் வந்த வியர்வைகூடச் சேறாகப் பயன்பட்டிருக்கும். அத்தகைய அல்லல்களை அடைந்தோம் நாங்கள். ஈடற்ற இடுக்கண்களோடு இடிபட்டோம். அதன் பலன் இன்று இடிந்த வீடு (ஜஸ்டிஸ் கட்சி) செப்ப னிடப்பட்டது, செம்மையாக. வீடு இடிந்த அன்று எட்டு அடிகூடக் கிட்டவராமல் எட்டிப்போனவர்கள், இன்று இடிந்த வீடு புதுப்பிக்கப்பட்டு, பூச்சு வேலை செய்யப்பட்டு, புது மெருகுடன் விளங்குவதைக் கண்டு விரைவாக வேகமாக வெற்றி முழக்குடன் வீறாப்புப் பேசிக்கொண்டு, பூர்ண கும்பத்தைக் கையிலேந்தி உள்ளே நுழைய மந்திரம் ஜெபிக்கப் புறப்பட்டு விட்டனர் பூரிப்போடு. நாங்கள் அவர்களை வரவேற் றோம், வாருங்கள், உள்ளே வந்து பாருங்கள், வீடு எவ்வளவு விசாலமானது, விரிவானது, காற்று எவ் வளவு நன்றாக வீசுகிறது, உள்ளே நுழைந்து வீட்டின் வாடைபட்ட உடனே கோழைக்கும் வீரம் பிறக்கும். துணிவும் நிமிரும், நரம்பிலே விசையதிகமாகும்,