உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை 41. எண்ணத்திலே எழுச்சி ஏற்படும் என்று எடுத்துச் சொன்னோம் என்ன செய்தனர் பூர்ண கும்ப மேந்திகள்? உள்ளே வந்து யாவற்றையும் உற்றுத் துருவிப் பார்த்தனரா? இல்லை. பின் என்ன செய் தனர்! நாங்கள் உள்ளே வரமாட்டோம்; பயமாக இருக்கிறது. நீங்கள் என்ன என்னவோ வீட்டைக் குட்டிச்சுவராக்கிவிட்டீர்கள். செய்த மாறுதல் பிடிக்கவில்லை என்று பேசினர், அடிப்படையை அறியாததால். மல் செய்து நீங்கள் பலப்பல உள்ளே ஆனால் வந்து உள்ளதை உள்ளபடி அறிய பயம். குடியிருக்க மட்டும் ஆவல் அதிகம். பூர்ண கும்ப மேந்திகட்காக உழைப்பாளிகள் வீட்டை விட்டுப் போக வேண்டுமா? எப்படி முடியும் அது? எனவே சென்று வாருங்கள் என்று செப்பினோம் அவர்களை. நம்முடைய கட்சியின் பெயர் மாற்றம் ஏன் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டோம். நம்முடைய தோழர்கள் இனியும் இனத்தை எழுச்சி பெறச் செய்யாதிருந்தால் அது இரங்கற்பாலதே! குடந்தை அறிவாளிகள் நிறைந்த இடம். வாளிகள் அதிலும் பார்ப்பன அறிவாளிகள் படித்த அறிவாளிகள் அதிகம். நான் கேட்கிறேன் அவர்களை நினைத்துப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள் சற்றே! ஆரியம் - திராவிடம் இரண்டும் ஒன்றா? ஆரிய நாக ரிகத்திற்கும், திராவிட நாகரிகத்திற்கும் வேற்றுமை இருக்கிறதா இல்லையா என்று வேற்றுமை, எதிலும் வேற்றுமை, எல்லாவற்றிலும் வேற்றுமை, எதற் கெடுத்தாலும் வேற்றுமை இல்லையா? கலையில் இனப்பண்பில் நடைமுறையில் வாழ்வில் வாழ்க்கை