உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மே தினம் முறையில், உழைப்பில், உண்டு களிப்பதில் வேற்றுமை யில்லையா? வேற்றுமை மிகத் தெளிவாக விளங்கு கிறதே; இல்லை என்று நெஞ்சாரக் கூறமுடியுமா? இவ்வித வேற்றுமை ஏன்? அதை மாற்றுங்கள், உங்கள் போக்கை மாற்றுங்கள், மறுமலர்ச்சி கொள் ளுங்கள்; அகம்பாவத்தை அகற்றுங்கள்; அறிவைக் கொள்ளுங்கள், ஊரார் உழைப்பை உறிஞ்சாதீர். உழைத்து மற்றவர்போல் உண்ணுங்கள், பூதேவர் களாய் வாழாதீர்; அது அறமல்ல; அறிவுடைமை யல்ல, அற்பத்தனம்; அயோக்கியத்தனம்; அதைவிட்டு நீரும் மனிதர்களாய் மனிதத் தன்மையோடு வாழ் வதே வகையான செயல் என்று வேண்டுகோள் விடுத் தோம். வேண்டுதல் விழலுக்கிறைத்த நீராயிற்று. ஆரியம் அதன் போக்கை, வாழ்க்கை முறையை, ஊரை உறிஞ்சும் உலுத்தர் வேலையை விடவில்லை, மாற்றவுமில்லை. மாறாக இன்று தேசியத்தின் பெய ரால் உருமாறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறது! ஏ. ஆரியமே! நீ உருமாற வேண்டாம். உன் போக்கை மாற்றவும் வேண்டாம். வேண்டுகோள் விடுத்த வேளை போய்விட்டது. நீ நன்றாக பஞ்சகச்சம் வைத்து உடுத்து, பூதேவனென்று புகழ்ந்துகொள். தர்ப்பைப் புல்லைக் காட்டிக் காசு பறி; அந்தரலோகத் திற்கு அழைத்துச் செல்வேன் என்று ஆசை காட்டி அகப்பட்டதைச் சுருட்டு! அதுபற்றிக் கவலையில்லை நமக்கு. ஏன்? ஆரிய சூழ்ச்சியை மக்கள் இன்று உணர ஆரம்பித்துவிட்டனர். ஆரிய உருத்தாங்கி தர்ப்பாயுதத்துடன் வெளிவந்தால் பிழைப்பு இருக் காது வருங்காலத்தில். இவன் ஆரியன் என அறிந்து