உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 43 நடக்க, உன் உருவம் உதவட்டும்! என்பதே எனது ஆசை. முஸ்லிம்கள். தங்களை முஸ்லிம்கள் என்றும், பார் ஸியர் தங்களைப் பார்ஸியர் என்றும், சீக்கியர் தங் களைச் சீக்கியர் என்றும், ஆப்ரிக்கர் தங்களை ஆப் ரிக்கர் என்றும் அழைக்க, அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லையே; நீ ஏன் உன்னை ஆரியன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறாய்? அழகற்ற நீக்ரோவனுங்கூடத் தன்னை நீக்ரோ என்று கூறிக் கொள்கிறான், நீ என்ன அவனைவிடக் கறுப்பா ஆரியன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட? அல்லது சிவப்பு இந்தியன் போல அவ்வளவு சிவப்பா? அதனால் "நான் ஆரியன்' என்று அறிவித்துக்கொள்ள ஆயாசப் படுகிறாய்? உள்ளதை உள்ளபடி கூறுவதிலென்ன அபசாரம் உனக்கு? நீ ஆரியன் என்பதை மறைக் கிறாயே ஏன்? அதனை அறியோமா நாங்கள்? கடந்த பல ஆண்டுகட்கு முன்னர், மாக்ஸ்முல்லர் வந்தபோது ஆரியவேதம் - எங்கள் வேதம், வடமொழி - எங்கள் மொழி, அது தேவ பாஷை என்று கூறிக் குதூகல மடையவில்லையா, பூரிப்படையவில்லையா நீங்கள்? அது கண்டு சென்னை மயிலையும் திருவல்லிக்கேணியும் திருநடனமாடவில்லையா? சின்னாட்களுக்கு முன் னருங்கூட மாணவரின் பள்ளிகளிலே ஆரியமத உபாக் யானம் என்றும், ஆரிய தர்மமென்றும் பாட புத்தகங் கள் வைக்கப்பட்டிருக்கவில்லையா? எதனால் அக மகிழ்ந்தீர் அப்போது? ஆரியர் நீங்கள்; ஆகையால் தானே ஆனந்தம்! ஜெர்மனியர் போரில் ஜெயித்துக் கொண்டிருந்தபோது என்ன ஜம்பம் பேசினீர்கள்?