உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மே தினம்.

'அவாளும் ஆரியாள்' என்று அகங் குழையவில்லையா? ஆரியத்தின் உயர்வைக் கண்டு ஆனந்த நடனமாடு கின்றீர்; ஆனால், "நாங்கள் ஆரியர்' என்று கூறிக் கொள்ள நீங்கள் அச்சப்படுகின்றீர்களே, ஏன்? வெட்கமா, துக்கமா, மர்மமென்ன? மக்களை ஏமாற்றத்தானே! செல்லாது அது இனி ஜெர்மானிய நாட்டிலே ஜெர்மானியர் அதிகம்; ஆங்கில நாட்டிலே ஆங்கிலர் அதிகம்; சீன நாட்டிலே சீனர் மிகுதி; கிரேக்க நாட்டிலே கிரேக்கர் எண் ணிக்கை மேம்பட்டது. எனவே அந்தந்த நாடு அவரவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. திராவிட நாட்டிலே யார் பெருவாரி? உழைப்பவர்கள் யார்? இது யாருக்குச் சொந்தம்? எங்களுக்கு - எங்கள் திராவிட இனத்திற்குச் சொந்தம். இது ஆரிய நாடு அல்ல, அல்லது ஆரிய ஆதிக்கத்திற்கு அடங்கும் நாடுமல்ல ஆரியருக்கு நாடில்லையே என்ற எண்ணம் ஏற்படலாம். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை; உலகிலேயே இரு இனங்கட்குச் சொந்த நாடு கிடையாது. இது வரலாற்றுச் சான்று. ஆனால் வருங்காலத்திலே திராவிட நாட்டிலே ஆரியருக் கென்று தனி இடமுண்டு அக்ரகாரத்திலே ஆரியம் அன்றும் இருக்கும். ஆனால் சற்றுப் பேதம் உண்டு, இன்றைய நிலைக்கும் அன்றைய நிலைக்கும். ஆரியம் வாழும்; ஆனால் பிறரைக சுரண்டியல்ல; பூதேவர். களாகவல்ல; விளைக்காது அறுக்கும் வஞ்சகர்களாக அல்ல, உழைப்பாளிகளாய் மனிதர்களாய், ஆரியம்