உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என் அண்ணாதுரை 45 விளங்கும் அன்று. ஆரியம் தன் இடத்தை விட்டு வெளிப்போந்தால் ஊர்காவலர் ஒரு கேள்வி கேட் பார், பதிலளித்த பின்னர்தான் வெளிப்படலாம். எங் குப் புறப்பட்டீர்? எதற்காக? மக்களுடன் எவ்வகை யில் கலக்கக் கருத்துக் கொண்டிருக்கிறீர்? என்ற வினாக்களுக்கு விளக்கமாக விடை வேண்டும். அவர் கள் கூறும் பதிலிலிருந்து அவர்களின் செயல் விவேக மான செயல், வஞ்சக வேலையல்ல என்று தெரிந்து பிறகுதான் வழிவிடுவார். ஏன்? ஆரியம் அத்துணை அறிவு படைத்துள்ளது தாங்கள் முன்னேறுவதில். சிலர் கேட்கலாம் ஆரியம் வேறு திராவிடம்: வேறு என்று பலப்பல பேசுகிறீர்; திராவிடத்திலே கூடப் பள்ளர் பறையர் என்றும், முதலியார், நாயுடு, சைவ, வைணவர், வேளாளர் என்றும் பல பிரிவுகள் உள்ளனவே, இது உங்கள் கண்ணில் உறுத்தவில் லையா? வீணே ஆரியத்தை மட்டும் ஏன் தூற்றுகிறீர் என்று ஒப்பாரி வைக்கலாம். நான் கூறுகிறேன் அத்தகைய தோழர்களுக்கு, ஆரியத்தின் அக்கிரமச் செயல்களால் உண்டான பிழை கள் இவை, வேறுபாடுகள் இவை. திராவிடத்திலே உள்ள இத்தகைய வேறுபாடுகளை நீக்கிக் கொள்ள முடியும். ஆரியத்திற்கு திராவிடத்திற்குயிடையே அளவுற்ற முரண்பாடுகள் உள்ளன. வேறுபாட்டை நீக்கிக் கொள்ள முடியும். ஆனால் முரண்பாடு நீக்க முடியாது. சான்றாக திராவிடத்திலுள்ள வேறுபாடு, தண்ணீருக்கும் பன்னீருக்கும் உள்ளதை ஒத்தது. தண்ணீரோடு பன்னீரைக் கலக்கலாம்; கெடுதியில்லை; தண்ணீரும் பன்னீரின் மணத்தில் பங்கு பெறும். இதில்