உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை பார்த்தால் தீட்டு என்று பலப்பல பேசுவான். இங்கு திராவிடத்தில் அது இல்லை. ஒருசில இருப்பினும் அது விலக்கக் கூடியது. ஆரிய மொழி வேறு; திராவிட மொழி வேறு. ஆரிய மொழியைத் தேவ மொழி என்று ஆரியர் கூறிக் கொள்வர். வழக்கத்திலே இல்லாதிருப்பினும், அவரது வீரமெல்லாம் நம்ப முடியாதவை; அதிலும் ஆண்டவனுடைய அவதார லீலைகளை அடிப்படை யாகக் கொண்டவை. நம்முடைய வீரமோ. கலிங் கத்துப்பரணியில், சிலப்பதிகாரத்தில் காணக் கிடக் கிறது. ஆரியக் கலை கற்பனை நிறைந்தது; திராவிடக் கலை உண்மை நிறைந்தது. சான்றாக, ஒரு நிகழ்ச்சியைக் காண்மின். சங்க நூலிலே ஒரு செய்யுள். வில் வீரன் ஒருவன் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டி விசையாக விடுகிறான் ஒரு புலியைக் குறி வைத்து. அம்பு வில்லினின்றும் விடு பட்டது மிக வேகமாக, புலியின் உடலை ஊடுருவிச் சென்று அருகிலிருந்த வாழை மரத்திலே பாய்ந்து நின்று விட்டது. இந்நிகழ்ச்சி உண்மையானது. உருவகப்படுத்தியதன்று. அம்பு புலியின் உடலைத் துளைத்துச் சென்றது என்பது அம்பின் கூர்மையையும் வேகத்தையும், அதை எறிந்தோனுடைய சக்தியை யும், குறி தவறாத திறமையையும் குறிக்கிறது. புலி யைத் துளைத்தபின் அம்பின் வேகம் குறைகிறது தடையேற்பட்டதால். எனவே புலியைத் துளைத்த அம்பு, வாழையைத் துளைத்துச் செல்ல யாமல் அதிலேயே பதிந்து நின்றுவிட்டது. வில்வீரனின் முடி