உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மே தினம் செய்கை இவ்விதம் கூறப்படுகிறது திராவிடக் கலை. யிலே. காண் இத்தகைய நிகழ்ச்சியை ஆரியம் கலந்த காவியத் திலே எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக் போம். இராமனது அம்பறாத் தூணியிலிருந்து அம்பு புறப்பட்டது; புறப்பட்டு இராவணனது "சீதையென்னும் சிந்தனை எங்கே உடலெங்கும் என்று தேடித் தேடி திரிந்து அங்கெல்லாம் பாய்ந்து பின் வெளிப்பட்டுக் கடலிலே சென்று குளித்துப் புனித மாகி மீண்டும் இராமனது அம்பறாத் தூணியில் வந்தமர்ந்தது என்று இயம்பப் படுகிறது. இத்தகைய செயல்கள் கவைக்கு உதவுமா? ஆராய்ச்சிக்குத்தான் நிற்குமா? கற்பனை என்று காணும்போதே கருத்திற் படவில்லையா? இதுதான் வீரமா? இவ்விதம் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் உள்ள முரண்பாடுகளை விளக்கமாக எடுத்துக் கூறப் புகின் ஏடு இடந்தராது. அண்மையில் நாட்டில் நடந்த செயல்களைக் காண்மின்: அவை எதைக் குறிக்கின்றன என்பதைக் கூறுங்கள்: பத்திரிகைகளை நீங்கள் பார்த்திருப்பீர் கள். மலையாளத்திலே ஒரு குளம். சீலர் நீராடினர் அதில் அவரும் மனிதர்தான். ஆனால் அது. ஆண்டவனுடைய அபிஷேகத்திற்கென்று அமைக் கப்பட்ட திருக்குளமாம். அதில் அவர்கள் நீராடியது தவறு: ஆடு, மாடு, முதலிய அறிவற்றவைகள் அதிலே. ஆனந்தமாக ஆடலாம். ஆனால் அறிவு படைத்த மனிதன் நீராடக் கூடாது, ஏன்? அவர்கள்