உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை 49 ஈழவர்கள்; ஆலயத்திலே நுழையத் தகாதவர்கள். அது மட்டுமல்ல; மனித ஜாதியில் மிக மட்டமாகக் கருதப்படுகின்றவர்கள் சமூகத்தால் குளத்திலே நீராடியதற்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்; குளத் தைப் புனிதமாக்கச் செய்யப்படும் பூஜா கைங்கரியங் களுக்கு வேண்டிய பொருள் கொடுத்துத் தீரவேண்டு மென்று கட்டளையிடப்பட்டனர். சட்டம் செய்தது இவ்விதம் என்று சன்மார்க்கம் பேசலாம். ஏன் அவ் விதச் சட்டம், அசட்டுச் சட்டம், அறிவுக்குப் பொருந் தாத சட்டம் ஆட்சியிலே அமைந்துள்ளது? அதிலும் இருபதாம் நூற்றாண்டிலே, இந்த ஆங்கில அரசாங் கத்தில்? அன்று ஆரியம் செய்த அநேக சூழ்ச்சிகளில் இதுவுமொன்று. இத்தகைய செயல்களிலே, அறிவு அன்பு, அல்லது ஆரிய அகம்பாவம், எது உளது, உரை யுங்கள்!. மற்றொரு மன்னர் சின்னாட்களுக்கு முன்னர் கோவிலுக்குச் சென்றார் ஆண்டவனை அர்ச்சிக்க. அவர், தாம் ஆண்டவனை உள்ளே சென்று தரிசிக்க வேண்டும், பூஜிக்க வேண்டும் என்று வேண்டினார். அர்ச்சகரை அய்யா அ பர் அனுமதிப்பாரா இதனை அரச ரும் அசாதாரணமானவர்தான். உண்ணாவிரதமிருந் தார், உலகைப் படைத்தோனை உள்ளே சென்று உபாசனை செய்ய, என்ன செய்தும் என்ன? அவர் கடைசிவரை அனுமதிக்கப்படவே இல்லை. அவர் மணலிலே இலிங்கம் செய்து பூசித்து வீடு திரும் பினாராம். ஆண்டவனைத் தங்கள் உடைமை, தங்கள் உயர்வுக்கான ஊன்றுகோல் என்று கருதும் உலுத்தர்களைக் கொண்ட நாடு இது. மே -4 பின்