உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மே தினம் மற்றொரு சேதி, மனத்தை வாட்டும் சேதி, மனிதத் தன்மையைப் பரிகசிக்கும் சேதி. சில கிழமை கட்குமுன் பத்திரிகைகளிலே பார்த்தோம். ஆம் குவாலியர் சமஸ்தானத்திலே நடந்தது. வருடாவரு டம் நடந்து வருகிறது. அங்கொரு பண்டிகையுண்டு, மதத்தின் பெயரால். ஜம்லா பண்டிகையென்று அதற்குப் பெயர். அன்று உயர்சாதி மக்கள் அனை வரும் கூடி விழாக் கொண்டாடுவர், ஆடிப்பாடிக் கேளிக்கைகள் புரிவர். அது பற்றி அக்கறையில்லை நமக்கு, ஆனால் அந்த விழாவிற்கு ஆதி திராவிடர் கள் தங்கள் பெண் மக்களை அனுப்ப வேண்டுமாம், எதற்கு? விழாவிலே பங்கெடுக்கவா? அல்ல. அந்தப் பெண்களைக் கேலியாகப் பேசுவர், தூற்றுவர் - உயர் சாதியினர் தாம் இன்புற. இது நடப்பது மதத்தின்" பெயரால், மதத்தின் பெயரால் விழாக் கொண்டாடி அதிலே பெண்களை, அதிலும் ஒரு குலத்தவரைத் தூற்றுவதா? எத்துணை நாள் அறிவற்றிருப்பர் அக் குல மக்கள்! தன்மானம் பெற்றனர் அவர்களும். இவ் வாண்டு தருக்கர் கொட்டத்தைச் சட்டை வில்லை. விழாவிற்குப் பெண்களை அனுப்பமுடியாது என அறிவித்துவிட்டனர். இது அறமல்லவா? அறி வுடைமைதானே! மானம் அவர்களுக்கும் உண்டல் லவா? இதன் விளைவு சாதி இந்துக்கள் ஆத்திர மடைந்தனர். தொன்றுதொட்டு நடந்துவரும் சம்பிர தாயத்தை எப்படி மீறலாம்? என்று கொதித்தெழுந் தனர், தடியெடுத்தனர் கையில். புகுந்தனர் கோயில், அடி அடியென்று அடித்தனர் அங்குள்ள மக்களை மமதை கொண்டு. இதன் விளைவாக இரண்டு உயிர்ச்சேதங்களும் விளைந்தவானம். என்ன இழிமதி இன்னும் நாட்டில்? மக்களை, அதிலும் பெண் மக்க செய்ய