உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என் அண்ணாதுரை 51 ளைத் தூற்ற ஒரு திருவிழாவா? அதுவும் மதத்தின் பேரால். மானங்கெடவில்லையா இதனால்? என்ன நயவஞ்சகம் மதத்தின் பேரால்! மதம் மக்களுக்கு மாசு தராதது என்று மகாத் மாக்கள் மனங்குழைந்து பேசும் இந்தக் காலத்திலே, மதத்தின் பேரால் இத்தகைய அநீதியும் அட்டூழிய முமா? இது தெரியாதா அவர்களுக்கு, அந்தராத்மா வுக்கு? பண்டித ஜவஹர் போன்றவர்கள் வாழும் நாட்டிலே நடக்கும் நியாயம் இது. ஒரு குலத்தோர் ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பதுமல்லாமல் எங்களுக்கும் மானம் உண்டு என்று கூறும் காரணத்தால் உதையும் வாங்குவதா? ஆனால் அலங்கார ஆர்ப்பாட்டத் துடன் அகில உலக தேசீயம் பேசப் புறப்படுவார் இதனைத் தடுக்க ஏதாவது செய்தார்களா? இந்தத் தேசியவாதிகள் மதக் கட்டுப்பாட்டை மதி கொண்டு மாற்றினார்களா? இல்லை, தங்கள் சிறுவிரலையும் அசைக்கவில்லை, இது. பற்றி. சமுதாயக் குறை பாட்டை நீக்க முற்படவில்லை, தேசியவாதிகள். மாறாக, சனாதனத்திற்குச் சப்பைக்கட்டுக் கட்டிச் சபையில் சிந்து பாடுகின்றனர். உண்மையை வெளிப் படுத்த, உலுத்தரை உழைப்பாளராக்க உரமில்லை நெஞ்சில். கேட்டை நீக்க உள்ளம் இல்லை. உலக உத்தமர் என்ற விளம்பரத்திற்கு வேண்டுமானால் இவர் செய்கை பயன்படலாம். இதுவா மனிதத் தொண்டு? ஆரிய திராவிட முரண்பாடுகள் அளவிறந்தன. ஆரியம் மிகத் தந்திரமுள்ளது. இல்லாவிட்டால்