உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை 53 அறியாமை அரசோச்சுகிறது; உலுத்தர்கள் ஊராள் கின்றனர்; உழைப்பாளிகள் உதாசீனம் செய்யப்படு கின்றனர். இதைப் பலப்பல பேசுகிறோம். அடி வயிறு வலிக்கக் கூச்சலிடுகிறோம்.. வீரர் வழிவந்த இனம் சர்க்கஸ் பார்க்கிறோம். அதில் ஒரு மனிதன் சிங்கம்புலி முதலிய மூர்க்கப் பிராணிகளையும் அடக்கி ஆட்டுவிக்கிறான், ஒரு சிறு கோலைக் கையி லேந்தி. அது கண்டு ஆச்சரியப்படுகிறோம். நாம். அதிலென்ன விசித்திரமுளது விந்தையுற? ஐந்தறிவு படைத்த மிருகத்தை ஆற்றிவு படைத்த மனிதன் ஆட்டுவிப்பதில் அற்புதமில்லை, அசம்பாவிதமு மில்லை. அவன் தன் ஆறாவதறிவால் ஆட்டுகிறான் ஐந்தறிவை. இதைவிட ஆச்சரியமானது, அசம்பா தமானது, வாழ்வில் நடைபெறுவது. வித என்ன? படைத்த மனிதன் அதே தன்மையுள்ள பிறிதொரு மனிதனுக்கு அடங்கி நடப்பது. ஆம்; திராவிடன் ஆரி ஆரியனைக் கண்டதும் அடிபணிகிறான். ஏன்? பார்ப்பனன் நம்மைத் தெரு வில் கண்டால் - விலகிப்போ என்று கட்டளையிடு கிறான். கோயிலிலே விலகி நில் என்ற உத்தரவு. கல்யாணமானால் யருக்கு முதல் தாம்பூலம் அவரில்லாமல் ஆகாது எதுவும் என்ற பேச்சு; அய்யர் அடே என்பதற்குள் ஆமாம் சாமி, அடியேன் இருக் கேனுங்க' என்ற பணிவு. எங்கும் அய்யருக்கு ஏகபோக உரிமை. எவரும் அவருக்குத் தாழ்வு; இவை யாவும் ஏற்படுவது வெறும் பிறப்பினால். ஏன் இவையெல் லாம்? எதனால் மனிதன் மனிதனுக்குப் பணிகிறான்,