உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மே தினம் அடங்குகிறான். ஐயர் என்று புகழ்கிறான்? இது அர்த்தமற்ற போக்கு; அறிவுக்கு அப்பாற்பட்ட அநாகரிகம். ஒருவருக்கு மற்றொருவர் அடங்குவது அவசியத்தைப்பொறுத்தது, காரணத்தோடு கூடியது என்றால் குற்றமில்லை. படுத்திருக்கும் நோயாளி யிடம் மருத்துவர் வருகிறார். நாக்கை நீட்டு என நவில்கிறார். நோயாளி நாக்கை நீட்டுகிறான். எதனால்? இது அவனுக்கு அவசியமானது, நோயைத் தீர்ப்பவர். மருத்துவர் என்ற காரணத்தால். இந்த முறை முற்றிலும் அவசியம் கூட. ஆனால் ஆரியனிடம் தாசனாக அடங்கிக் கிடப்பதற்கு ஆதாரம் என்ன? அன்றிப் பலன் தான் என்ன? ஒன்றுமில்லை. பின் ஏன் நாம் அவனுக்கு அடங்கவேண்டும் என்று நம்மவர் எண்ணிப் பார்ப்பதில்லை. இன்று ஆரியர்கள் ஆங்கிலேயனைக் கண்டு சீறுகின்றனர்; நான் அதைப் பாராட்டுகிறேன். ஏன்? ஒரு சிறிய கும்பல், நாட்டிலே அன்று தொட்டு இன்றுவரை முறுக்கில்லாத இனம், மோட்சநரக உலகைக் காட்டி வயிறு வளர்க்கும் கும்பல், வீறாப்புப் பேசுகிறது, வீர உணர்ச்சி கொள் கிறது இந்நாளில். அன்று முதல் இன்றுவரை வீரர் வழி 5ம் இனம், கனகவிசயரை கல். சுமக்க வைத்த இமயத்தில் இனக்கொடியை நாட்டிய இனம், வீரமே வடிவாகிய இனம், வீரமற்று, வீணர் களாய்த் திரியும் அந்தக் கும்பலுக்கு அடங்கிக் கிடக் 'கிறதே! இது என்ன அற்புதம்? இதற்குக் காரணம் என்ன? ஏன் அடங்கவேண்டும்? அறிவுள்ள காரணம்