உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை 55 உண்டா? இல்லை. நீ என்ன உயர்வு என்று மறுத்தால் மனுவைக் காட்டுகிறான், மாந்தாதாவைக் காட்டு கிறான், சட்டத்தைக் காட்டுகிறான், சம்பிரதாயத் தைக் காட்டுகிறான், சாஸ்திரத்தைக் காட்டுகிறான். சடங்கைக் காட்டுகிறான், பழக்க வழக்கத்தை, வழி வழி முறையே பாட்டன் தீட்டின ஏட்டை, புராணத் தைக் காட்டுகிறான். ஒன்றில்லாவிட்டால் ஒன்று என்று பலப்பல சூழ்ச்சிகள் செய்கிறான்; அதனால் நம் இனம் அறிவிழந்து, சூடு சுரணையற்று ஆரிய னுக்குத் தாசனாக அடிமைப்பட்டுக் கிடக்கிறது. துப்பாக்கியைக்கூடத் துச்சமாக கருதும் இனம் தர்ப்பையைக் கண்டு தத்தளிக்கிறது. அறிவு, ஆற்றல், செல்வம், சிறப்பு முதலிய எதிலே சிறந்தவர்கள் ஆரியர்கள் நம்மைவிட? படிப் பில் சிறந்தவராக நம்மிடை சர் இராமசாமி இல்லையா? நிர்வாகத் திறமையில் சர் சண்முகத்தை மிஞ்சுபவர் யார்? மருத்துவத்தில் சிறந்தவர்களாக சர் இலட்சுமணனார், குருசாமி முதலியோர் இல்லையா? பணத்தில் ராஜா சர் அண்ணாமலை இல்லையா? இன்னும் மன்னர்கள் தான் குறைவா? எது இல்லை நம்மிடம்? படிப்பு, பலம், பணம், அறிவு, ஆற்றல், அரசு எல்லாம் இருக்கின்றன நம்மிடம். ஆனால் ஒன்றுதான் இல்லை; பக்குவமில்லை; அது இருந்தால் ஆரியக் கொட்டம் அடங்கும். எனவே தான் இன உணர்ச்சி வேண்டும் என்கிறோம்; படித்த கூட்டம் பக்குவம் பெற வேண்டும் என்கிறோம். பாராண்ட இனம் பாராரியாய் வாழ்வதா? கனக் விசயரைக் கல் தூக்க வைத்த இனம் ' கயவரின்