உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மே தினம் காலடியில் கிடப்பதா? என்று கேட்கிறோம். இன உணர்ச்சி எழுச்சியுறுகிறது இன்று: ஆடிக் காற்றிலுங் கூட அசையாத அளவுக்கு அஸ்திவாரம் பெற்றுத் தூண்டா விளக்காய்த் துலங்குகிறது; அதை உணருங் கள்! அதன் வழி நடவுங்கள். நாட்டிலே ஒரு குலம் பாடுபடாது உண்டு உறங்கிக் கிடக்க, மற்றவர் உடல் தேய, உள்ளமும் உணர்வும் தேய, உழைத்துக் கெடுவதா? இன்று தோழர்கள் நெசவில் நெய்வது நூற்றுக்கு நூறு, 60-க்கு 60 என்ற நயமான (நூல்) துணிகள், பொள்ளாச்சி பார்டர்,பெங்களூர் பேஷன் என்ற புதுப்புது மாதிரிகள்; ஆனால் அவர்களணியும் ஆடை யின் தரமோ 30-க்கும் குறைவானது; பண்ணைகளில் பாடுபட்டுப் பயிர் செய்வது சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பா, இன்னவித உயர் வகுப்புப் பயிர்கள். ஆனால் அவன் உண்பது கால் வயிற்றுக் கஞ்சி. அதுவும் கம்பங் கூழோ கேழ்வரகுக் கஞ்சியோதான். பாட்டாளி பாடு பட்டுக் கட்டுவது மாடமாளிகைகள், கூட கோபுரங் கள் போன்ற மனைகள், நான்கடுக்கு ஐந்தடுக்கு அரண்மனைகள். அவைகளை நிமிர்ந்து நோக்கினால் கழுத்து வலிக்கும். ஆனால் அவன் அண்டியிருப்பது குனிந்து நுழைய வேண்டிய குடிசை! ஏன் பேதம் இந்த நாட்டிலே? இந்தப் வளமில்லாத நாடு வறுமையுடன் இருந்தால் ஆச்சரியமில்லை; பாங்கற்ற நாட்டிலே பஞ்சம் மிகுந் துளது என்றால் குற்றம் கூறுவோர் இல்லை; அரபு.