உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 57 நாட்டுப் பாலைவனத்தில், ஐஸ்லாந்தில், எஸ்கிமோ நாட்டுப் பனிக்காட்டில் வளமிராது, இங்கு நீர்வளத் திற்கும், நிலவளத்திற்கும், குடிவளத்திற்கும் குறை வில்லை, மக்கள் மனவளம் ஒன்று தவிர, வற்றாத ஜீவ நதிகள், அவைகளால் வளர்க்கப்படும். வயல்கள், அவைகளில் விளையும் வகை வகையான மணிகள், நஞ்சை புஞ்சை ஆகியவை ஏராளம் உண்டு; இந்த நாட்டில். கவிகள் பல நாடெங்கும் சாலைகள் சோலைகள், அவற்றில் கனிகள் குலுங்கும். அதைக் கண்டு தீட்டுவர். மண்ணுக் கடியில் பொன்; கடலுக்குள்ளே முத்து: காட்டிலே சந்தனம், கஸ்தூரி வகைகள். இத் தனை இயற்கை எழிலுடன் விளங்கும் இந்த நாட்டில் இல்லாமை இருக்கக் காரணம் என்ன? மக்கள் உழைத்து உழைத்துத் தேய்ந்து உற்சாகமிழந்திருப்ப தேன்? அந்த இல்லாமையும் அதன் பயனாக ஈனத் தொழில் புரியும் நிலைமையும் திராவிடரை மட்டும் தாக்குவானேன்? இந்நாள் நம் திருநாட்டில் ஒருசிலர் கிளம்பி யிருக்கின்றனர். பொது யைப்போர்த்துக் கொடைமையெனும் போர்வை அவர்கள் முதலாளி யார் என்று தெரியரமலேயே முதலாளிகளை ஒழிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். பாவம்! பணக்காரர்களை எல்லாம் முதலாளிகள் என்று அவர்கள் தவறாகக் கருதிக்கொண்டு. வீண் வேலையிலீடுபடுகின்றனர். பார்ப்பனப் பிறவி முதலாளியை அவர்கள் கண்டிப்ப தில்லை; கண்டும் கொள்வதுமில்லை. ஆண்டவன்