உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மே தினம்: பேரால் ஆயிரமாயிரம் வேலி நிலங்களும், கோடானு கோடி பொருளும் குவிந்து கிடப்பதை அவர்கள் காண்பதில்லை. ஏன்? அவர்கள் விழிப்புற்று எழுச்சி யுறும் நம் இனத் தோழர்களின் கவனத்தை வேறு திசையில் திருப்ப முயல்கின்றனர். அத்தகைய முயற்சியல்லாமல் வேறென்ன இது? உண்மை முத வாளிகளை, பிறர் உழைப்பை உறிஞ்சும் உலுத்தர் களை, கண்மூடிக் கடவுட் கொள்கையில் கருத்தழி யாது, மத மயக்கத்தில் விழாது ஒழிக்க முயலும் போது, அவர்கள் அதை மறைத்து வேறு மார்க்கத் திலே மக்கள் மனத்தைத்திருப்பப் பாடுபடுகிறார்கள். சமதர்மம் என்று சனாதனத்திற்குச் சிறப்பத் தேடு கிறார்கள். பொது உடைமை என்று அதற்குப் பெயர் கூறுகின்றனர்.ஆனால் மானிடரின் பிறப்பும் பொது- உயர்வு தாழ்வற்றது- என்பதை அவர்கள் மறக்கின்ற னர். இந்த ஏமாற்று வித்தை இன்னும் எத்தனை நாட் களுக்குச் செல்லும்? இவர்கள் செய்கையை எண்ணும்போது, ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகின்றது. சென்னையில் சைனா பஜார் தெருவில் போவோர் வருவோரின் சட் டைப் பையைக் கத்தரிக்கும் ஓர் எத்தனால் பணம் பறிகொடுத்தவர் பதறுவார். திருடனைத் தேடி ஓடுவார். உடனிருப்பவரும் உதவுவார் அவருக்கு. ஆனால் அந்த எத்தனின் பங்காளர்கள் கூட்டத்தில் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, களவாளியைக்காப் பாற்ற வேண்டி வேறு திசை நோக்கி இதோ திருடன் அதோ கள்ளன் என்று இரைச்சலிடுவர். அது கேட்டு அனைவரும் உண்மை வழியை விட்டு உலுத்தர்