உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை .59 பேச்சைக் கேட்டுத் தவறான திசையிலே திருடனைத் தேடி ஓடி அலுத்துத் திரும்புவர். அத்தகைய எத் தனுக்குத் துணைபுரியும் கயவனின் கருத்துப் போன் றதுதானே இந்நாள் பொது உடைமையாளரின் போக்கு? நான் ஒரு வார்த்தை கேட்கிறேன் பொது உடை மைத் தோழர்களை, பொது உடைமை பேசும்புனிதர் களே! பஞ்சம் பஞ்சமென்று பறைசாற்றுகிறீர்களே! அந்தப் பஞ்சம் யாவர்க்கும் பொதுவா? ஏன் ஒரு குலத்தைப் பஞ்சம் பிடிப்பதில்லை? உங்கட்கு நல் லெண்ணமிருந்தால் உங்கள் நெஞ்சில் தோன்றாம் லிருக்குமா இது? பஞ்சத்தினால் சம்மட்டி ஏந்தும் பார்ப்பானைப் பார்ப்பதில்லை, ஏன்? கல் உடைக்கும் பார்ப்பனனைத்தான் கண்டதுண்டா நீங்கள்,ஏன்? அந்தக் குலம் மட்டும் குனியாது வளையாது குந்திக் குதிர்போல் பெருகுகிறது, ஏன்? அவர்கள் கட்டை வண்டி ஓட்டுவதில்லை; கனமூட்டை சுமப்பதில்லை; மலத்தைக் கூட்டுவதில்லை; பஞ்சம்கூடப் பார்ப்பா னுக்கு ஒருவிதம், பாட்டாளிக்கு வேறு விதம் என்று பார்த்துத்தான் வருமா? ஏன் நம்மவர் மட்டும் உச்சி வேளையிலே உழைக்கின்றனர் மாடுபோல். நம் முடைய மகளிர் அனிச்சம் பூவினும் மென்மையார் என்று புலவரால் புகழப்படும் பூவையர்கள் மட்டும் காடேறி, மேடேறி, நாடு சுற்றிச் சுள்ளி பொறுக்கு கின்றனர். கவிகள் பாடும் கருங்குவளை மலர்போன்ற கண்படைத்த நம் இனக் காரிகைகள் கடுவெயில் நேரத்தில் கல் உடைக்கக் காணலாம். ஆனால் பார்ப் பனக் கும்பலில் ஒருவர்கூட செய்யவில்லை எந்த வேளையும்? பார்ப்பனப் பெண் ஒருத்திகூடப் பிறர்