உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. மே தினம் வீட்டில் பணிப் பெண்ணாக இருக்கக் காணோமே! ஏ பொதுவுடைமைவாதிகளே! நீங்கள் ஏன் இதைக் கவனிப்பதில்லை? இது எந்தப் பொருளாதார பேதத் "தில்" அடங்கியது? எவரும் இதுவரை ஏற்படுத்தாத தந்திர முதலாளி ஏற்பாடல்லவா இது? பலர். உழைப்பை ஒரு சிலர் உறிஞ்சி உண்டு களிப்பது உத் தமம் என்று எண்ணுகிறீர்களா? ஏன் மௌனம் இது பற்றி? முதலாளிகள் ஒழிந்தால் யாவும் நன்கு நடக் கும் எனப் பொது உடைமை வாதிகள் நவில்கின்றனர். ஆனால் இந்த நாட்டுப் பொது உடைமையாளர்கள் உண்மை முதலாளியைப் பற்றிக் கவலைப்படுவ. தில்லை. குடந்தையில் எப்படிப் பார்த்தாலும் கும்பேஸ் வர நாதரைவிடப் பெரிய முதலாளி எவரும் இல்லை. உண்மைதான். மனித முதலாளியைவிட அவர் மிக மிகப் பெரிய முதலாளி. மனிதனுக்கு இல்லாத செள கரியங்கள் அவருக்குண்டு. அவருடைய ஆட்சியோ இப்பூமண்டலமெங்கும் பரவும்; குடிபடைகள் குவல் யத்தோரெல்லாரும்; அவரது இருப்பிடமோ கோயில், கோட்டை போன்றது, கொத்தளங்களோடு கூடியது; பணம் பல கோடி நிலம் ஏராளம்; பண்ணையாட்கள் பலப் பலர்; வாகனங்கள் வகை வகையானவை; வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆனவை; ஊர் கற்றிவர உன்னதத்தேர்; உல்லாசத்துக்குப் பல்லக் குச்சவாரி. ஆம் இத்தனைக்கும் அவர் தம் கைவிட்டுச் சல்லிக் காசும் செலவிடார்; மாறாக அவரிடம் எம் மலைபோல் மேலும் மேலும் குவியும்;தம் பண்ம்.