உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் - அவை சி. என். அண்ணாதுரை செஞ்சேனைத் தினம் என்ற விழாக்கள் ரஷியாவிலே, விமரிசையாகக்' கொண்டாடப்பட்டு வருகின்றன. அவை அங்கு மட்டுந்தான். உலகிலே வேறு நாடுகள் இந்த விழாக்களை, சோவியத் ரஷியா வுக்கு மட்டுமே சொந்தமான விழா என்று கருதுகின் றன. எனினும் இந்த மே தினத்தை மேதினி எங்கும் உள்ளவர்கள், எமக்கும் விழாத்தான் என்று உரிமை கொண்டாடும் இன்று பிரபல்யம் அடைந்துவிட்டது. ஆகவே, மே தினம், கம்யூனிஸ்டு களின் விழா என்று கருதுவதும், அதனைத் திரா விடர் கழகத்தார் கொண்டாட வேண்டிய அவசிய மில்லை என்று எண்ணுவதும், சரியல்ல. பாட்டாளி மக்களின் விடுதலை விழா, மே தினம். நாடு அல்ல இதற்கு எல்லை! பாட்டாளிகள் வாழ்வுக் காக-விடுதலைக்காக உரிமைக்காக, மே தினத்தை கொண்டாடுகின்றனர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் உழைப்பது, 8 மணி நேரம் குடும்பத்தினரு டன் குதூகலமாக வாழ்வது, மற்ற 8 மணி நேரம் ஓய்வ கூறுகிறது. தி எடுத்துக் திட்டத்தை மே தினம் பாட்டாளிக்குப் புதுவாழ்வு அமையவேண்டுமானால், இந்தத் திட்டம் தேவை. உழைத்து அலுப்பதும், உருக்குலைவதும்,ஓயாமல் உழைப்பதும், வாழ்வின் சுவையையே காணாதிருப்பு தும், இன்று பாட்டாளியின் (கதியாக இருக்கிறது, இதனால் தொழிலாளி, துயரின் உருவமாகிறான்: அடி மைப்படுகிறான். வாழ்வு பெரியதோர் சுமை என்று எண்ணுகிறான். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டார்கள், எட்டு மணி