உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மே தினம் நேர வேலைத் திட்டத்தை வலியுறுத்தினர், அதனை வலியுறுத்த, ஆண்டுதோறும் மே மாதம் முதல் தேதி அன்று விழா நாளாகக் கொண்டாட்டம் நடத்த ஏற் பாடு செய்தனர். இந்த விழாவின் துவக்கத்தின் போது, சோவியத் ரஷியா இல்லை! ஜாரின்ரஷியாவே இருந்தது. ரஷிய நாடு அல்ல, இவ்விழா விமரிசையாக நடந்த இடம்; அமெரிக்கா' எனவே, மே தினத்தைப் பாட்டாளிகளின். விடுதலைக்காகப் பாடுபடும் நோக்கங்கொண்ட எல்லாக் கட்சியினரும் கொண்டா டலாம் - திராவிடர் கழகத்தாருக்கு இது கடமை மட்டுமல்ல, உரிமையுங்கூட, ஏனெனில் திராவிடர் கழகம், ஏழை எளியவரின் புது வாழ்வுக்காகப் பணி புரிவதையே திட்டமாகக் கொண்டிருக்கிறது. திரா விட இனமே பாட்டாளி இனம் என்று விளக்கி வருகி: றது, திராவிடர் கலாச்சாரமே உழைத்து வாழ் வதையே வலியுறுத்துகிறது. யாகக்குண்டத்தருகே அமர்ந்திருப்பது, ஓம்ப் புகையைக் காட்டி ஊரை ஏய்ப்பது, மோட்சலோகத்துக்குச் சீட்டளிப்பது, வேதமோதி வாழ்வு நடத்துவது, ஆரூடம் கூறிப் பிழைப்பது ஆகியவை, திராவிட இனக் கலாச்சாரத் துக்கு முற்றிலும் முரணானது- ஆரியக்கலாச்சாரத் தின் இலட்சணம் இவை உழவுக்கும், தொழிலுக்கும் உயர்வு கூறுவது, திராவிடக் கலாச்சாரம்! அவை இரண்டும், யர்ந்த காரியமல்ல என்று கூறுவது, வகுப்பினருக்கு ஆரியப் பண்பு.