உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை திராவிடரின் கண்கள், ஏர்முனை, கடலடி, காட் டுப்பாதை, நாட்டுநிலை இவைகளின் மீது செல்வன.. ஞானக்கண்"ணினரான ஆரியருக்கோ, இவற்றின் மீதல்ல; சத்யலோகம், அதல், சுதல, தராதல பாதாள் லோகங்கள் ஆகியவற்றின் மீது செல்லக் கூடியன எனவே, கலாச்சார முறைப்படி பார்த்தாலும், கல். வரலாறு காட்டும் நமது வாழ்க்கை முறைப்படி பார்த் தாலும், இன்றைய நிலையைப் பார்த்தாலும், நாம் பாட்டாளிகளே. ஆகவே பாட்டாளிகளின் விடு தலைக்கான இந்த மே தினத்தைக் கொண்டாடும் உரிமை, மற்றவர்களுக்கு இருப்பதைவிட நமக்கே அதிகம். அது மட்டுமல்ல; மே தினம், மாஸ்கோ தினம்: செஞ்சேனைத் தினம் என்று கொண்டாடும் பல கட்சி களிலே உள்ள பல தலைவர்கள் காசியைக் கடந்து சென்றதில்லை. நமது திராவிடர் கழகத் தலைவர் பெரியார், மாஸ்கோ வீதிகளிலே உலவினவர் - சோவியத் மாட்சியை நேரடியாகக் கண்டவர் பொது உடைமைக்காரர் என்பதற்காக, சர்க்கா ருடைய தொல்லைகளுக்கு ஆளானவர், நம் பத்திரி “கைகளுக்கு ஜாமீன் பறிமுதலாகியுள்ள:கிறோம். புத்தகங்கள் காரணத்தால், மற்ற எந்தக் கட்சிக்காரரும் சிந்திக்காத நாட்களிலேயே, நாம், சுயமரியாதை இயக்கத்தினர் மே தினத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம். முதன் முதலில் தமிழ்நாட்டிலே மே தினம் கொண்டாடிய கட்சி, சுயமரியாதைக் கட்சிதான்.