உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மே தினம் .. எனவேதான், நாம் மே தின விழாவை, உரிமை யுடனும் உவகையுடனும் கொண்டாட வேண்டியவர் கள் என்று கூறுகிறேன். அந்த விழா, ஏதோ கம்யூ னிஸ்டுக் கட்சியின் 'காபிரைட்' என்று எண்ணிட வேண்டியதில்லை; 1889-ம் ஆண்டு, சர்வதேச சமதர்ம மாநாடு. பாரிஸ் பட்டணத்தில் கூடி, மே மாதம் முதல் தேதியை, உலகப் பாட்டாளி மக்களின் விடுமுறை நாளாகக் கொண்டாடும்படி தீர்மானம் நிறை வேற்றிற்று. அதுமுதல் மே தினம், உலகிலே எல்லா நாடுகளிலும் பாட்டாளிகளின் விடுதலை விழா நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது! ஜாரின் கொடுங்கோலாட்சிக் காலத்திலும், ரஷி யாவில், மே தினம் மகத்தான விழாவாகக் கொண் டாடப்பட்டே வந்தது. பயங்கரமான அடக்குமுறை இருந்துங்கூட, மே தினத்தன்று துண்டு வெளியீடுகளை வழங்கி வலம் நடத்தியும், பொதுக்கூட்டம் நடத்தியும், மே தினத்தை அவர்கள் கொண்டாடத் தவறியதில்லை. போலீசின் தடியடி மட்டுமல்ல, பட்டாளத்தாரின் குண்டுகள், விழாக் கொண்டாடு வோர் மீது பாய்ந்த காலம் அது. மேதினத்தைத் தொழிலாளரின், விடுதலை விழா, நாளாக மாற்றி அமைத்தவர், மாவீரர் லெனின் தங்கள் குறைகளைப் போக்கிக்கொள்ள, உரிமை களைப் பெற இந்த மே தினத்தைப் பரணி பாடும் நாளாக்கினார் அப் புரட்சிவீரர்! அவருடைய முயற்சி யினால் ரஷியாவிலே, மே தின விழா ஜார் ஆட்சியை