உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என். அண்ணாதுரை. ஆம்; ஆச்சாரியார் ஆட்சியில் அமர்ந்திருந்த அன்று, தேசியக் காங்கிரஸ் " நாடாண்ட அன்று நடந்த உண்மை. வடநாட்டிலே மிகப் பெரிய இரும்புத் தொழிற்சாலையாக விளங்குவது டாட்டா'. இரும்பு எஃகுத் தொழிற்சாலை. அப்போது இங்கு நாகபட்டினத்தில் ஓர் எஃகுத் தொழிற்சாலையை ஆரம்பித்தனர். அதனுடன் டாட்டா போட்டி யிட்டது. நாகபட்டினம் டாட்டாவுடன் போட்டி யிட்டுச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தது; அது சமயம் ஆச்சாரியார் முன் வந்து நாகபட்டினம் தொழிற்சாலையை டாட்டாவின் ஏஜெண்டாய் வேலை செய்யுமாறு சமரசம் செய்து வைத்தார்.

-

கோயமுத்தூர் மில்கள் இருக்கின்றனவே என்று கூறலாம். இது ஏதோ யுத்த காலம். அதனால் சில பல லட்சங்கள் கிடைத்திருக்கும் அவர்களுக்கு. பின் னால் முடியாது; ஏன்? மார்வாரி, மூல்டானி, பார்ஸி, குஜராத்தியர்களுடன் இவர்கள் போட்டிபோட முடி யாது. இவர்கள் 1923, கொண்டு வேலை செய்வர்; அவர்கள் இன்றைய புதுப் 3, 1930 மாடல் மெஷினைக் புது இயந்திரங்களை ஆங்கில, அமெரிக்க நாடுகளி லிருந்து இறக்குமதி செய்து வேலைசெய்வர். அதனால் குறைந்த செலவில் அதிகம் உற்பத்தி செய்வர். அவர் கள் B.A.I.C.S. போன்ற படிப்பாளிகளையும் பொருளாதார நிபுணர்களையும் வேலையில்வைப்பர். இவர்கள் பாக்கிக் கணக்கு 1 லக்ஷம், 1 கோடி. அவர் கள் பாக்கிக் கணக்கோ 20 லக்ஷக்ஷிம், 20 கோடியாகும். இவ்விதம் சகல துறைகளிலும் அவர்கள் முற்போக் கடைந்துள்ளனர். நாமோ இன்னும் பிற்போக்கில்