உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மே தினம் ஆனால் அதுவே சுதேசியாக இருந்தால் ரூ.17.இந்த ரூ. 2 அதிகம் ஏன் என்று கேட்டால், "அப்பா! அது சுயராஜ்ஜியத்திற்கு நீ கொடுக்கும் அச்சாரம், பார்த் மாதாவுக்கு அளிக்கும் காணிக்கை” என்று பசப்பினர் பல்லிளித்தனர் வடநாட்டார், தம் தொழில் வளர்ச்-- சியைக் கருதி அதோடு ஆங்கில அரசாங்கத்தினிடமும் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி வேண்டினர். இப்போதுதான் புதிதாகத் தொழில் ஆரம்பிக்கும் எங்களுக்குப் பாதுகாப்பு (Protection). வேண்டும் என". வேண்டினர் வெளி நாட்டிலிருந்து வரும் சாமான் களுக்குச் சுங்கம் (Tariff) போட்டுப் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டனர். சுங்கம் என்றா என்றால் உள் நாட்டுச் சாமான் ரூ.10 ஆனால் வெளிநாட்டுச் சாமானும் அதே விலைக்கே விற்குமாறு விலை வித்தி யாசத்தைச் சமம் செய்தல் ஆகும். இவ்விதம் எத்தனை கோடி நஷ்டஈடு (Subsidiasry) வாங்கினர் அதனாலும் தென்னாட்டு மக்களின் கண்மூடிக் கதர் மோகத்தாலும், ஷோலாப்பூரிலும், பூனாவிலும், அஹம்தாபாதிலும் மில்கள் வளர்ந்தன.

இதற்காகவா "திராவிட நாடு" தனியே பிரிக்கப் படவேண்டும்; தென்னாட்டிலும் ஏன் அவ்விதம் மில்கள் உண்டாக்கக்கூடாது என்று- சில தோழாகள் கேட்கலாம். நியாயமான கேள்வி தான்! தென்னாட் டில்ஆலைகள் தோன்றினால் எவ்விதம் வெளிநாட்டுப் பொருள்களுடன் வடநாட்டாரால் போட்டியிட முடியவில்லையோ, அவ்விதம் தென்னாடும் வட டுடன் போட்டியிட்டுச் சமாளிக்க முடியாது. இது கற்பனையல்ல, கண்ணால் கண்ட காட்சிதான்! நாட்