உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை 75 கட்டும் எண்ணம் கொண்டிருந்தால் மில் தொழில் வளர்ச்சியுற்றிருக்காது, தோன்றிக்கூட இருக்காது, இதற்குக் காரணம் யார்? காந்தி பக்தர்களாய் விளங்கும் பஜாஜ், பிர்லா முதலானோர் தானே மில் முதலாளிகள்? அன்னிய நாட்டுத் துணியை மட்டும் பகிஷ்கரித்தார் காந்தி; ஆனால் இந்நாட்டு மில் துணியைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஏன்? அந்த மில் முதலாளிகள் காங்கிர சின் ஆதரவு பெற்றுத் தம் தொழிலைப் பெருக்கினர். மேலும் காங்கிரசுக்கு வேண்டும் உதவிபுரியும் தியாக மூர்த்திகளாக அவர்கள் விளங்குகிறார்கள். இந்த முத லாளிகளிடம் மில் வேண்டாம் என்று காந்தியார் கூறு னாரா? ஏன் கூறவில்லை? அதனால் கதர் வளர்ச்சி குன்றும் என்ற எண்ணம் தோன்றாத குறைமதி யாளரா காந்தி? அவ்விதமிருப்பார் என நான் நினைக் கவில்லை. நெஞ்சார அறிந்தும் மில் வேண்டாம் என்று கூறவில்லை மகாத்மா. போகட்டும். இவ்விதம் கூறா விட்டாலும் அதனை ஆதரிக்காமலாவது இருந்தாரா? அதுவும் இல்லை. மாறாகச் சுதேசி! சுதேசி! என்று கூறி ஊக்கந்தந்து, விளம்பரப்படுத்தி வட நாட்டு மில் களுக்கு உதவி புரிந்தார். அங்கு அவ்விதம் தொழில் உணர்ச்சி வளர்ந்தது. இங்கோ! கதரைக் கண்மூடித் தனமாக நம்பி நலமிழந்தனர் நம்மவர். மேலும் தங்கள் தொழில் வளர வட நாட்டார் சுதேசி இயக்கம் மூலம் விளம்பரம் தேடினர். விலை யதிகமானாலும் சுதேசியையே வாங்குங்கள் என்று கூறினர். ரூ.8 பெறும் வெளிநாட்டுச் சாமான்